கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊழல் மற்றும் பிரிவினவாத சூழ்ச்சிகள்…
தமிழ் மாணவர்களாகிய நாம் இன மதமொழிபேதமின்றி ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றோம். ஒரு சில தலைமைகள் இவற்றினை குழப்புகின்றன. இவர்களது இத்தகைய நோக்கத்திற்கு நாம் வழிசமைக்ககூடாது. ஆகவே மாணவர்களாகிய நாம் ஒற்றுமையோடு பொது நிலையில் இருந்து செயற்பட வேண்டும், நிர்வாகத்தினரது பிரிவினவாத சூழ்ச்சிக்கு நாம் ஆளாகக்கூடாது.
கடந்த காலத்தில் சிங்கள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல பொதுவான பிரச்சனைகளுக்கு தமிழ் மாணவர்கள் ஆதரித்து வந்துள்ளனரே தவிர எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. ஒரு சில வேளை சிங்கள மாணவர்கள் நினைக்கலாம், மாணவர் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலானோர் தமிழ் மாணவர்கள் எனவே சிங்களமாணவர்கள் பிரச்சனைகளை கருத்தில் கொள்வதில்லை என தவறாக நினைக்கலாம். அவ்வாறு எனின் தயவு செய்து அவ்வாறு நினைக்க வேண்டாம். இன மத மொழி பேதமின்றி அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறந்த மாணவக்கட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றோம்
தற்போது அவ்வாறான கட்டமைப்பு இல்லாவிடினும் எதிர்காலத்தில் அனைத்து சமுகங்களையும் உள்ளடக்கி உருவாக்க வேண்டும் என்பதை ஏகமனதாக வரவேற்கின்றோம். சகோதர மாணவர்களே 2010-2014 வரை பல பொது நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மேலும் சிங்கள மாணவர்களால் ஒழுங்கற்ற நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுத்து நின்றோம். இவ்வாறான சூழலில் நாங்கள் மட்டும் நிர்வாகத்தினரினது பிரிவினவாத சூழ்ச்சிக்கு இரையாகலாமா????? தமிழ் மாணவர்களிடமிருந்து பிரிந்து செயற்பட காரணம் என்ன???
தற்காலத்தில் எழும் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் தீர்வுகண்டால் போதும் என எண்ணி ஏனைய மாணவர் நலம் புறம்தள்ளி உயர்மட்ட நிர்வாகத்தோடு கைகோற்பது தவறான எடுத்துக் காட்டாகும். இதனை பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவினர் தங்களது சுயலாபத்திற்கு பயன்படுத்துகின்றளர். இதனால் தங்களது தவறை மறைத்து மாணவர் முன் பாசாங்குசெய்கின்றனர். இந்தத் தலைமையை மாற்றியமைக்க நாம் இன மத மொழி பேதத்தை மறந்து ஒன்றிணைய வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
சகோதர சகோதரிகளே தற்போதைய 1ம் 2ம் வருட மாணவர்களுக்கு நிர்வாகத்தினரினது பிரிவினவாத சூழ்ச்சியை அறியமுடியாது ஆனால் 3ம் 4ம் வருடமாணவர்கள் நன்கு அறிவர். முன்னைய சிங்கள மாணவர்கள் இந்நிர்வாகத்தில் அதிருப்தி அடைந்த போது தமிழ் மாணவர்கள் அவர்களது சூழ்ச்சி அறியாது ஆதரவளித்து வந்துள்ளனர். ஆனால் காலம் கடந்த உண்மை நிலை உணர்ந்து ஊழலுக்கும் அநியாயத்திற்கும் துஸ்பிரயோகத்திற்கும் எதிராக எது வந்தாலும் பரவாயில்லை என துணிந்து எதிர்க்க முனைந்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பைக்காட்டிய விதம் தவறாக இருந்தாலும் அவர்கள் எதிர்ப்பு நியாயமானது.
அதனால் 2 மாணவர்கள் கல்வி ரீதியிலும் ஏனையோர் பல்வேறு வழிகளிலும் பழி வாங்கப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வாகத்தினரால் தொடரப்பட்டுள்ளது என்பதே உண்மை (மாணவர் ஆலோசகர் கூட்டத்தில் உபவேந்தர் மாணவர்களை பழி வாங்கப்படும் விதமாக பேசியதே இதற்கு சான்று) பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மாணவர் ஒன்றியத்தையோ சக மாணவர்களையோ பயன்படுத்தியதும் இல்லை பயன்படுத்தபோவதுமில்லை. அவர்களால் தக்க சமயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் போது அதனை நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
தற்போது பெரும்பாலன மாணவர்கள் ஏன் ஊழலுக்கும் அநியாயத்திற்கும் துஸ்பிரயோகத்திற்கும் எதிராக எது வந்தாலும் பரவாயில்லை என துணிந்து நேருக்கு நேர் எதிர்க்கின்றனர் விசாரணை ஆணையம் எதற்காக வைக்க கோருகின்றனர் என்பதை நீங்களே உங்களது முடிவை மேற்கொள்ளுங்கள்.அவர்களுடன் ஒன்றிணைந்துசெயற்படுவதா இல்லையா என்பதனை…….நீங்கள் சிந்தியுங்கள்.
உபவேந்தர் சொல்கிறார் ரூபா.10 எடுத்திருந்தால் நிருபியுங்கள் என ஆனால் திருடுவதை தெரியாத புரியாத அனைவருக்கும் பிரித்து பல குறுக்கு வழிகளில் செயற்பட அவருக்கு நிகர் அவர் தான். ஊழல் என்ற சொல் காசு நடவடிக்கை மட்டுமல்ல அது பதவி சட்ட துஸ்பிரயோகம் போன்ற அனைத்தும் ஊழல்தான். பல்கலைக்கழகத்தில் பரிட்சை முடிவை தாமதப்படுத்துதல், சிற்றுண்டிசாலை உணவின்மையும் ஊழல்தான்.
உபவேந்தர் தான் பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்துள்ளார் என விளம்பரம் செய்கின்றனர், மாணவர்களே அபிவிருத்தி என்பது என்ன???? அபிவிருத்தி இடம் பெற்றது என்றால் சிற்றுண்டிசாலையில் பெரும்பாலானோர் அமர இடமில்லை கல்வியில் தரமில்லை கணணி கூடத்தில் அமர இடமில்லை நூலகத்தில் புதிய புத்தகமில்லை இதுதானா அபிவிருத்தி? உபவேந்தர் குறிப்பிடும் அபிவிருத்தி நூலகம், கலைகலாசார பீடம், முகாமைத்துவ பீடம், அரங்கம், இருபக்கமதில், நுழைவாயில் அனைத்தும் யுத்தத்தின் பின் இடம்பெற்றஅபிவிருத்தி.
இவையனைத்தும் தற்போதைய உபவேந்தர் காலத்தில் இடம்பெற்றது உண்மைதான், ஆனால் இவற்றிற்கு பல நடைமுறை உண்டு. இவற்றிற்கு செயற்றிட்டம் வகுத்து நிதியைபெற குறைந்தது 2 வருடம் செல்லும். அவ்வாறெனில் உபவேந்தர் இதற்கு உரிமை கோரினாலும் இதனை கொண்டுவர பாடுபட்டது யாரென்பது அனைவரும் அறிந்த உண்மை.
முன்னைய உயர்கல்வி அமைச்சின் விஸ்வ வர்ணபால அவர்களின் காலத்தில் ஒதுக்கிய நிதியே அதனை பிரேம்குமார் திருடி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் கலாநிதி அத்தநாயக்க அவர்களின் பரிந்துரைக்கமைய விடுவித்த நிதியே தவிர உபவேந்தரது முயற்சியால் வந்ததல்ல என்பதே உண்மை.
முன்னைய ஆணைக்குழு பல ஊழல்களைக்கண்டறிந்த பின்னர் புதிய கனேடிய உபவேந்தர் நியமனம் 13/12/2012 அன்று ஐனாதிபதி செயலகத்தில் இடம் பெற்று 5/3/2012 பதவியை பொறுப்பேற்று உபவேந்தர் 15/2/2012 முடிவடையும் ஆனால் 3 வருடத்தை குறுக்குப்புத்தியால் UGC யின் முன்னாள் chairman மூலம் 4/3/2015 வரை பதவியில் இருக்கலாம், என உறுதிப்படுத்தி அதற்கான முறைகேடான ஆவணமொன்று உதவிபதிவாளருக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன் என புரியவில்லை 6/3/2012 அன்று உபவேந்தர் ஆற்றிய உரையில் ஊழல்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவற்றுக்கு மேலாக பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனக் கூறிய இவர் ஒரு சில தரக்குறைவான கட்டங்களைக் கட்டியதும் உண்மை ஆனால் வெறும் முகத்தோற்றத்தை கொண்டு அபிவிருத்தி என்று எவ்வாறு கூறுகின்றிர்கள் ??
முன்னைய ஆணைக்குழு பல ஊழல்களைக்கண்டறிந்த பின்னர் புதிய கனேடிய உபவேந்தர் நியமனம் 13/12/2012 அன்று ஐனாதிபதி செயலகத்தில் இடம் பெற்று 5/3/2012 பதவியை பொறுப்பேற்று உபவேந்தர் 15/2/2012 முடிவடையும் ஆனால் 3 வருடத்தை குறுக்குப்புத்தியால் UGC யின் முன்னாள் chairman மூலம் 4/3/2015 வரை பதவியில் இருக்கலாம், என உறுதிப்படுத்தி அதற்கான முறைகேடான ஆவணமொன்று உதவிபதிவாளருக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன் என புரியவில்லை 6/3/2012 அன்று உபவேந்தர் ஆற்றிய உரையில் ஊழல்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவற்றுக்கு மேலாக பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனக் கூறிய இவர் ஒரு சில தரக்குறைவான கட்டங்களைக் கட்டியதும் உண்மை ஆனால் வெறும் முகத்தோற்றத்தை கொண்டு அபிவிருத்தி என்று எவ்வாறு கூறுகின்றிர்கள் ??
சரஸவை மதுரா என்ற பாதுகாப்பற்ற விடுதி 6 க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் நிராகரித்தபோதும் முன்னாள் உயர்கல்வி அமைச்சரின் உறவினர் நிறுவனமான ICC கட்டிட குத்தகை நிறுவனமானது கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 கட்டடங்களை கட்ட முன் வந்ததன் காரணம் என்ன ?? தரகுப்பணம் ஒருபுறம் மாணவர் நலனில் எந்த அக்கறையுமற்ற உபவேந்தரது முடிவு அத்தோடு பணம் மட்டும் வந்தால் போதும் என்று உபவேந்தர் செயற்பட்டமை கவனிக்கப்பட வேண்டிய உண்மை. மாணவர் நலனில் அக்கறை கொண்டு தான் உபவேந்தர் இக்கட்டிடங்களை கட்டினார் என நினைப்பது தான் மடமைத்தனம்.
கல்விகற்க போதுமான உபகரணம் இல்லாதபோது (micro scope) கலைப்பீட மாணவர்கள் போதியளவு கதிரைகள் இல்லாத போது சிற்றுண்டிச்சாலையில் தரமான உணவு இல்லாத போது நூலகத்தில் புதிய தரமான புத்தகங்கள் இல்லாத போது 1கோடி ரூபா செலவில் நுழைவாயில் தேவையா??? மாணவர் சுதந்திரத்தை பறிக்கும் CCTV கமராக்களுக்கான 2.3 millon வீண் செலவாகியுள்ளது. சரஸவை மதுரா விடுதிக்கு 600 கட்டில்கள் ஒன்று ருபா. 31000/ஸ்ரீ பெறுமதியானவற்றை ருபா. 54480/ஸ்ரீ கொடுத்து வாங்கியதன் மூலம் இவர் உழைத்த இலாபத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்;.
இவையனைத்திற்கும் உபவேந்தர் மற்றும் முன்னாள் உயர்கல்வி அமைச்சின் சகோதர தரகரே காரணம்.
தொடரும்…!!!
தொடரும்…!!!
http://www.jvpnews.com/srilanka/97466.html
இலங்கை விடயத்தில் நழுவும் அமெரிக்கா….
ஐ.நா விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துமாறு சிறிலங்கா கோரியுள்ள நிலையில், நேற்று முன்தினம் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்திருந்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
இந்தச் சந்திப்பில், அறிக்கையைத் தாமதிப்பது குறித்துப் பேசப்பட்டதா என்று நேற்று வொசிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நிச்சயமாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரே.
இந்த செயல்முறையில் அவர் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இந்த அறிக்கையை ஐ.நா தாமதிப்பதை விரும்புகிறீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், இதுகுறித்து இலங்கையர்களுடனும், ஐ.நாவுடனும், தனிப்பட்ட ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அறிக்கையைத் தாமதப்படுத்தும் விவகாரத்தில், அமெரிக்காவின் ஆதரவை ஜோன் கெரி வெளிப்படுத்தவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/97475.html
மைத்திரிக்காக UNP – SLFP மோதல்
இந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களின் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் மூலமே வெற்றிப் பெற்றார் என்ற அடிப்படையில், அவர் தங்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நேரடியாகவே வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
எனினும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சிக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
http://www.jvpnews.com/srilanka/97484.html
Geen opmerkingen:
Een reactie posten