தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்தக் கோரி யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்?
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 02:59.46 AM GMT ]
சம்பூர் மக்களை சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சம்பூர் மக்களை தங்களது இடங்களிலிருந்து விரட்டியடித்திருந்தது.  இதனால் இந்த மக்கள் பெரும் துன்ப துயரங்களை எதிர்நோக்க நேரிட்டது.
மக்களின் பாரம்பரிய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அதனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிட்டது.
எனினும், தற்போது அந்த மக்கள் தங்களது சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாகவே சம்பூர் மக்கள் மூதுர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பூர் மக்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6E.html

19 இலங்கை மீனவர்கள் விடுதலை
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 03:13.31 AM GMT ]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
குறித்த இலங்கை மீனவர்களை, இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கன்னியாகுமாரிக்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மீனவர்களும் மீன்பிடிப் படகுகளும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக இந்த மீனவர்கள் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கு டெல்லியிலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை விடுத்து மீனவர்களை விடுதலை செய்யுமாறு டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6G.html

மகிந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி என்ற பேரில் பணத்தை தின்று தீர்த்தார்கள்: ரஞ்சித்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 03:51.26 AM GMT ]
மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான் கொத்தமல்லி. அதனாலேயே இடைக்கால வரவு செலவு திட்டத்தில் விலை குறைத்தோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் எங்களது வரவு செலவுத் திட்டத்தினை கொத்தமல்லி வரவு செலவு திட்டம் என்றே மக்கள் கூறினார்கள்.
கொத்தமல்லியும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான். இவ்வாறான நிவாரணங்கள் வழங்கும் போது ஒவ்வொருவரும் அவமரியாதையாக பேசுகின்றார்கள். முன்னாள் அமைச்சர்கள் நிவாரணங்கள் குறித்து பேசியதே இல்லை.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் குறித்து யோசிக்கவில்லை. அபிவிருத்தி என்ற பேரில் பணத்தை தின்று தீர்த்தார்கள். நாட்டு பணத்தை வீணடித்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் இன்று நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள் என ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6J.html


சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்தக் கோரி யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 03:59.59 AM GMT ]
ஐ.நா.வின் விசாரணை அறிக்கையை கண்டிப்பாக மார்ச் இல் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நேற்றைய தினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் பேர்லின் நகரில் யேர்மனிய வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் இறுதியில் மனுவும் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் நிலவியிருந்தது.
இருப்பினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விசாரணை அறிக்கையினை மார்ச் மாதம் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7A.html

Geen opmerkingen:

Een reactie posten