தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் அறிமுகம்?

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது!- பொலிஸ் தலைமையகம்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 01:07.11 AM GMT ]
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு ஒன்றை இலங்கை பொலிஸ் தலைமையகம் நேற்று நிறுவியுள்ளது.
பாரியளவிலான நிதி மோசடிகள், ஊழல்கள், சட்டவிரோத திட்டங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இந்த விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த பிரிவு இயங்க உள்ளது.
இந்தப் பிரிவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார்.
இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் பாரியளவிலான நிதி மோசடிகள், பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், ஊழல் மோசடிகள், சட்டவிரோத திட்டங்கள், பொதுமக்கள் பணத்திற்கு எதிரான மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில் இந்தப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய முடியும்.
அமைச்சரவை துணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையிலும் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6B.html

புலிகளின் வான்படைப் பிரிவு பொறுப்பாளரின் கணனி தொடர்பில் விசாரணை?
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 01:02.19 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த குணசாந்தன் சந்திரலிங்கராஜா என்பவரின் கணனி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குணசாந்தன் பயன்படுத்திய கணனி மலேசியாவிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பொலிஸார் இந்தக் கணனியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் கணனி தொடர்பில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
விமான ஓடு பாதைகள் அமைத்தல், விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை உள்ளிட்ட விபரங்கள் இந்தக் கணனித் தகவல்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்லிங் ரக இரண்டு விமானங்களை செக் குடியரசிடமிருந்து, பங்களாதேஸ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளனர் என குறித்த பத்திரிகையில் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குணசாந்தனிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணசாந்தன் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதும் குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது குணசாந்தனின் கணனியின் ஊடாக இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6A.html
பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் அறிமுகம்?
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:56.38 AM GMT ]
பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.  பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் பௌத்த மதப் பாதுகாப்பு தொடர்பிலான சட்டங்களும் உள்ளடக்கப்பட உள்ளது.
விகாரைகள், தேவாலயங்கள் சட்டம், பௌத்த பிரசுர நியமன சட்டம், புதிய மத வழிபாட்டுத்தலங்களை அமைத்தல் மற்றும் சில மதங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளது.
பௌத்த பிக்குகளுக்காக தனியான பௌத்த பிக்கு நீதிமன்றமொன்று அமைக்கப்படும். இந்த நீதிமன்றிற்காக ஓய்வு பெற்ற நீதவான்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அட்டபிரிகர என்னும் அன்பளிப்புப் பண்டங்கள் மற்றும் பௌத்த கொடி தொடர்பில் தர நிர்ணயங்கள் பேணப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளித்த பௌத்த பிக்குகளுடன் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்த பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய பௌத்த சட்டங்கள் அறிமுகம் குறித்து அறிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt5J.html

Geen opmerkingen:

Een reactie posten