[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 05:05.57 AM GMT ]
இன்று அதிகாலை 1.30 அளவில் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள் மீது இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை: மண் தரையில் பயிலும் மாணவர்கள்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 05:00.16 AM GMT ]
தங்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நிலையான ஒரு கட்டிடமோ இடமோ இல்லை என இம்மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 ஆண்டுகாக கருமாரி அறநெறி பாடசாலை என்ற பெயரை கொண்டு இப்பாடசாலை நடைபெற்று வருகின்றது.
குறித்த அறநெறி பாடசாலை 2006ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 15ஆம் திகதி மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இந்த பாடசாலையில் 100ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
எனினும் இந்த பாடசாலையின் நிலைமை குறித்து பல அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களென பலரிடமும் தெரிவித்தும் அவர்கள் பார்வையிட்டு செல்வதாகவும் மிக விரைவில் கட்டிடம் ஒன்று கட்டி தருவதாக வாக்குறுதி அளிப்பதாகவும் எனினும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என இம்மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இப்பாடசாலை நடாத்துவதற்கு இடத்தை மட்டும் கொடுத்தால் தற்காலிக கூடாரங்களை வைத்து இப்பாடசலையை நடாத்தி செல்ல முடியும் என இப்பாடசாலையை நடத்தும் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
வெயிலிலும் மழையிலும் மண் தரையில் அமர்ந்து கல்வி பயிலும் இம்மாணவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் உட்பட பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns3D.html
Geen opmerkingen:
Een reactie posten