[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:50.40 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய திஸ்ஸ அத்நாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானித்ததாக அந்தக் கட்சியின் உள்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தீர்மானத்தை திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கைக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்கா தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 08:08.50 AM GMT ]
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரொருர் இல்லாத காரணத்தினாலேயே புதிய தூதுவரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்புக்கான முக்கிய தூதுவரான நிஷா பிஸ்வாலுக்கு அடுத்த படியாக தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்ட அதுல் கெசாப் என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.
இவ்வாறான இராஜ தந்திரியொருவரை இலங்கைக்கான தூதுவராக நியமிப்பதன் நோக்கம், அமெரிக்கா இலங்கையுடன் சிறந்தவொரு நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தி கொள்ளதற்காகவேயாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் இலங்கையின் அமெரிக்க தூதுவராக மிக்சேல் ஜே சிசன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnszB.html
ரணில் விக்கிரமசிங்க சீற்றம் கொள்ளாத சிங்க நரி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 08:21.06 AM GMT ]
மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் போட்டியிட்டிருக்க முடியும்.
தேர்தல் முடிவு ரணிலுக்கு சாதகமாக அமையாது என்ற கருத்து இருக்குமாயின், சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய போன்றவர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் கெளரவத்தைக் காப்பாற்றி இருக்கலாம்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க இதை எல்லாம் தியாகம் செய்து மைத்திரிக்கு இடம் கொடுத்தார். ரணிலின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக் கொண்டது.
எனினும் ரணில் விக்கிரமசிங்க இதை எல்லாம் தியாகம் செய்து மைத்திரிக்கு இடம் கொடுத்தார். ரணிலின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக் கொண்டது.
இதுதவிர, மேற்குலக நாடுகளுடன் ரணில் கொண்டுள்ள உறவு காத்திரமானது.
மேற்குலகத்துடன் ரணில் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பும் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்தது.
எனினும் மைத்திரியை ஜனாதிபதி ஆக்குவதில் பின்புலமாக இருந்த ரணில் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
ரணிலின் இராஜதந்திரம் வெளியில் தெரியாத தாழமுக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ரணில் விக்கிரமசிங்கவை புரிந்து கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தவறிழைத்து விட்டார். ரணிலை ஒரு சாது என்று மகிந்த நினைத்ததுதான் மகிந்தவின் தோல்விக்கு முதற் காரணம்.
மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது ரணிலை அடிக்கடி அலரி மாளிகைக்கு அழைப்பார். மகிந்தவின் அழைப்பை ரணில் ஒருபோதும் நிராகரித்ததில்லை.
மகிந்தவின் ஒவ்வொரு அழைப்பின் போதும் அலரி மாளிகைக்குச் சென்ற ரணில், மகிந்தவின் பலம் எது? பலவீனம் எது? என்பதை நன்றாகக் கற்றுக் கொண்டார்.
எனினும் இதனைப் புரிந்து கொள்ளாத மகிந்த, ஒரு கோப்பை தேநீருடன் ரணிலைத் தன்னால் மடக்க முடியும் என்று நம்பியிருந்தார்.
ஆனால், ரணில் சாதுவாக இருந்தாலும் அவர் ஒரு சீற்றம் கொள்ளாத சிங்க நரி என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை. ரணில் ஒரு சிங்க நரி என்று கூறும்போது, அதன்பொருள் கொள்வதில் இடர்பாடு ஏற்படலாம்.
சிங்கங்களிலும் நரிகள் உண்டு. நரிகளிலும் சிங்கங்கள் உள்ளன என்பதன் அடிப்படையில் எது பொருந்துமோ அதனை நீங்கள் துணிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ரணில் விக்கிரமசிங்கவுடனான தொடர்பாடலில் தமிழ் அரசியல் தலைமைகள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ஜனவரி 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த மறுநாள் வைகறைப் பொழுதில் ரணில், மகிந்த இருக்கும் அலரி மாளிகைக்குச் சென்றார்.
பதவியை விட்டுக் கொடுக்குமாறும் ஆபத்து ஏற்படாமல் தான் பாதுகாப்பதாகவும் மகிந்தவுக்கு உறுதி வழங்கினார்.
ரணில் மீது கொண்ட நம்பிக்கையால் மகிந்த அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அட! இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் யாரேனும் கேட்டால், ரணிலை மகிந்த நம்பியிராவிட்டால்; அலரி மாளிகைக்கு ரணில் வருவதற்கு முன்னதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை அவரின் வீட்டுக்கு ஓடுமாறு மகிந்த கூறியிருப்பாரல் லவா?
இதுதான் சொல்கிறோம் ரணிலுடன் தமிழ் அரசியல் தலைமைகள் மிக அவதானத்துடன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நிலைமை கவலைக்கிடமாகும்.
புதிய அரசியமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 30
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 08:51.40 AM GMT ]
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 எனவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் வரையறுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதனடிப்படையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அமைச்சுக்களுக்கான துறைகள் தொடர்பான விடயங்கள் தெளிவாக உள்ளடக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnszE.html
நுகேகொடை கூட்டத்திற்கு ஐந்து லட்சம் பேர் வரவில்லை: ஹெல உருமய
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 09:43.31 AM GMT ]
நுகேகொடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக இடம் பெற்ற பேரணிக்காக ஐந்து லட்சம் பேர் வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படி கூறுவது போன்று ஐந்து லட்சம் பேர் வந்திருந்தார்கள் என்றால், நுகேகொடையில் இட வசதி எவ்வாறு போதுமானதாக இருந்திருக்கும் என்று கேட்கத் தோன்றுவதாக ஜாதிக ஹெல உருமயவின் மேற்கு மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் புனித பாப்பாண்டவரின் வருகையின் போது ஐந்து லட்சம் மக்கள் வந்ததாக கூறினார்கள். அதை நம்ப முடியும்.
தோல்வியடைந்து மனவேதனையுடன் இருப்பவர்களின் துக்கத்தை தீர்ப்பதற்கு ஒரு வழி வேண்டும் என்பதற்காக அரசாங்க ரீதியில் இரண்டு மூன்று பேர் கூறும் இவ்வாறான கதைகளின் மூலம் மக்களின் தீர்ப்பை தீர்மானிக்க முடியாது.
பேரணிக்கு மக்கள் வந்தார்கள் என்பதற்காக மக்களின் தீர்ப்புகளை மதிப்பிட முடியாதென நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தீயினால் வீடுகளை இழந்த டன்பார் மக்களை பார்வையிட்டார் மாகாண அமைச்சர் ராம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 10:47.43 AM GMT ]
மின்சாரக் கோளாறு காரணமாக நேற்று காலை 10 மணியளவில் டன்பார் தோட்ட லயன் குடியிருப்பில் இரண்டு வீடுகள் தீ விபத்திற்குள்ளாகின.
வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தோட்ட உத்தியோகத்தரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை இவர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி- ஹற்றன் டன்பார் தோட்டத்தில் தீ விபத்து: 2 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்
மகிந்தவை அரங்கிலிருந்து தூக்கியெறிவதே தமிழர்களின் நோக்கம்: சி.சிறீதரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 10:02.36 AM GMT ]
நேற்று தமிழக தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலிலே சிறீதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களித்தார்கள். மைத்திரிபால அதைத் செய்வார், இதைச் செய்வார் என தமிழர்களிடத்தில் நாங்கள் கூறவில்லை.
எந்தவித எதிர்பார்ப்புக்களுமின்றி, மகிந்தவை அரங்கிலிருந்து மாற்றவேண்டுமென்று தங்களது வாக்கினைப் பயன்படுத்தினார்கள்.
அந்த வாக்குப் பலத்தினூடாக மைத்திரிபால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சிங்கள மக்களும் மாற்றத்திற்கான அடிப்படையைக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் குடும்ப அரசியலில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் இருந்தது என சிறீதரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnszH.html
Geen opmerkingen:
Een reactie posten