தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

தொகுதிவாரி தேர்தல் முறையினால் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம்: முத்துசிவலிங்கம் சந்தேகம்

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசின் முயற்சி தேவை: தமிழிசை தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 04:11.39 AM GMT ]
இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அதிக முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை தள்ளிப்போடப்பட்டமைக்கு தமிழக அரசு காரணமாக இல்லாத போது உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 04:23.50 AM GMT ]
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாண சபை இளம் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் இளம் உறுப்பினர்கள் ஒழுங்கு செய்திருந்ந ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ்லங்கா சுதந்திர கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை செய்து வருகின்றது என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்து சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கட்டியெழுப்புவார்கள் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஒரு கிணற்றைப் புனர்நிர்மாணம் செய்ய 5 லட்சம் ஒதுக்கீடு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 04:37.58 AM GMT ]
கடந்த அரசாங்கம் தனது பிரதேசத்திலுள்ள ஒரு பொது கிணற்றை புனர்நிர்மாணம் செய்ய 5 லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளதாக பொருளாதார அவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே இந் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பொது கிணறு ஒன்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு பொதுவாக 50 ஆயிரம் ரூபாவே செலவு செய்யப்படுகின்றது.
எனினும் கடந்த அமைச்சு பொது மக்களின் பணத்தை இவ்வாறு பயன்படுத்தியுள்ளமை ஒரு பெரும் அநியாயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்த, சஜின் டி வாஸிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 04:49.49 AM GMT ]
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் நேற்றையதினம் சுமார் மூன்று மணி நேரங்கள் இவர்களிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


தொகுதிவாரி தேர்தல் முறையினால் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம்: முத்துசிவலிங்கம் சந்தேகம்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:48.48 AM GMT ]
புதிய தேர்தல் முறையின் மூலம் மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரஜாவுரிமையை மீண்டும் பறிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
1948ம் ஆண்டு பறிக்கப்பட்ட மலையக மக்களின் பிரஜாவுரிமை 2003 ம் ஆண்டு மலையக மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் தற்போதைய வாக்காளரின் எண்ணிக்கையின்படி சனத்தொகை விகிதாசாரத்தின்படி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் 15 முதல் 16 பேர் அங்கத்துவம் வகிக்க வேண்டும்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் அதிகமான அங்கத்தவர்களை கொண்டுவர முடிந்த போதிலும் தற்போது பாராளுமன்றத்தில் ஏழு அங்கத்தவர்களே இந்திய வம்சாவளி மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்றனர்.
புதிய தேர்தல் முறை தொகுதிவாரியாக உருவாக்கப்படுமானால் நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதி மூன்று தொகுதியாக காணப்பட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருவர் மாத்திரமே தெரிவு செய்யப்படும் நிலை தோன்றும்.
அவ்வாறு புதிய தேர்தல் முறையில் பொது தேர்தல் நடைபெற வேண்டுமாயின் நுவரெலியாவில் 8 தொகுதியில் 4 அங்கத்தவர்களும், பதுளை மாவட்டத்தில் 2 அங்கத்தவர்களும், கண்டி மாவட்டத்தில் 2 அங்கத்தவர்களும் இரத்தினபுரி, கேகாலையில் தலா ஒவ்வொருவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்.
மலையக மக்களைப் பொறுத்தவரை தனித்தொகுதி உருவாக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் போராடும்.
அத்துடன் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், தொகுதிவாரி தேர்தல் முறை தொடர்பில் கட்சியின் ஆலோசனைகளை பெற வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்று கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu5A.html

Geen opmerkingen:

Een reactie posten