தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறோம்: யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் முதலீடுகளுக்காக இலங்கையின் கதவுகள் திறந்தே உள்ளன: மங்கள சமரவீர
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 02:19.46 PM GMT ]
சீனாவின் முதலீடுகளுக்காக இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் தமது நாடு சீனாவின் முதலீடுகளுக்கு பாதுகாப்பான பூமியாக திகழும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பீஜிங் நகரில், சீன பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போதே இதனை கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
துறைமுக நகரம் தொடர்பான விடயத்தை சீன அதிகாரிகளுடன் தான் நேரடியாக பேசவில்லை எனவும் சீனாவின் திட்டங்கள் குறித்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்காது. சீனாவின் முதலீடுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் முன்னர், இலங்கை, சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்.
சகல முதலீட்டாளர்களுக்கு பொதுவான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்தவே இலங்கை முயற்சித்து வருகிறது.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், நலலாட்சி மற்றும் திறந்த மனப்பான்மையின் அடிப்படையிலான முதலீடுகளை ஊக்குவிப்பதே இலங்கையின் திட்டமாகும் எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர் வேங், இலங்கையின் சிறந்த பங்காளி என்ற மட்டத்தில் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் எனக் கூறியுள்ளார்.
இலங்கையின் நம்பிக்கையான முதலீட்டு உதவியாளன் என்ற மட்டத்தில் தொடர்ந்தும் செயற்பட சீனா விரும்புகிறது. அதேபோல், இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக சீனா தொடர்ந்தும் உச்சளவிலான உதவிகளை வழங்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீன விஜயம் அமைந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv7D.html


இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறோம்: யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 03:22.38 PM GMT ]
இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் 1.30 மணியளவில் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். அதற்கு பிரதேச செயலாளர் தடையாக உள்ளார். எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் கொடும்பாவியை எரிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போதும், சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திய சில நபர்களை அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த குழுவில் பலர் இறுதி நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv7E.html

Geen opmerkingen:

Een reactie posten