[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 05:14.44 AM GMT ]
பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைவரும் பேசுவது தேசிய அரசாங்கம் குறித்து. ஏதோ காட்டுக்குள் வாழும் குருட்டு யானை போன்று அங்கும் இங்கும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
இன வாதம் என்றால் என்ன? இனவாதம் குறித்து விளக்கம் தருமாறு நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு சவால் விடுக்கிறோம்.
தேசியவாதம் குறித்து பேசுபவர்களே இனவாத முகாம்களில் தள்ளி புதிய பயணத்தை ஆரம்பிக்க முயற்சிக்கிறார் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

103 வருடம் பழைமை வாய்ந்த பாடசாலை: அடிப்படை வசதியின்றி இயங்கும் அவல நிலை
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 05:51.27 AM GMT ]
இப்பாடசாலையின் கட்டிடம் 103 வருடம் பழைமை வாய்ந்ததாகும், 60 அடி நீளமும் 30 அடி அகலம் கொண்ட இக் கட்டிடத்தில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகள் நடைபெறுகின்றது.
தற்போது இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெடிப்புற்றும், யன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் காணப்படுவது மட்டுமல்லாது அக்கட்டிடங்கள் மழைக்காலங்களில் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பாடசாலையின் கூரை தகரம் பல வருடங்களாக மாற்றப்படாத காரணத்தினால் சேதமடைந்து மழை காலங்களில் நீர் வடிவதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன் பாடசாலையில் போதியளவு கட்டிட வசதி இன்மையால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியினால் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அதில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் மலசல கூடம் இன்மையால் மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு குடிநீர், மின்சாரம், விளையாட்டு மைதானம் மற்றும் பாதுகாப்பு வேலி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இப்பாடசாலை இயங்கி வருகின்றது என்பது கவலைக்குறிய விடயமே ஆகும்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv3F.html
Geen opmerkingen:
Een reactie posten