தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமைக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாஸைகளை மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
இந்த தமிழ் தலைவர்களின் ஆலோசனைக்கு அமையவே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரியளவில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சம்பந்தனும், சுமந்திரனும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமைகள் சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கு தேவையான அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்குவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5E.html
Geen opmerkingen:
Een reactie posten