தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

கிழக்கில் அதிகாரம் பகிரப்படவில்லை! முதலமைச்சரின் செயல் பிரச்சினைக்குரியது: கபே

தற்போதைய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதா?: பத்தரமுல்ல சீலரத்தின தேரர் கேள்வி
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:03.28 AM GMT ]
தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடிகாரர்களை கைது செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன என பத்தரமுல்ல சீலரத்தின தேரர் கேட்டுள்ளார்
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதா என்று எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. ஒப்பந்தத்தை குறித்த அரசாங்கம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஏன் ஊழல் மோசடிக்காரர்களை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த மறுக்கின்றது? ஏன் அவ்வாறானவர்களை கைது செய்யாமல் காலத்தை கடத்துகிறார்கள்?
அதேபோன்று போதை பொருள் கடத்தியவர்கள் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய்யவும் இல்லை செய்ய முயற்சிப்பதும் இல்லை.
தயவு செய்து அரசாங்கம் மக்களுக்கு கூறவேண்டும் ஏன் இவர்களை இதுவரை கைது செய்யவில்லை என்பதனை. அப்படி இல்லை என்றால் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரிகள் யாராவது குறித்த மோசடிக்காரர்கள் மற்றும் போதை பொருள் வியாபாரிகளுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளீர்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என சீலரத்தின தேரர் கேட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7G.html


இலங்கையில் மாகாணங்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும்: தா.பாண்டியன்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:09.08 AM GMT ]
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என கோயம்பத்தூரில் இன்று இடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கைக்கு ஆதரவு அளிப்பதை மாத்திரம் செய்யாது வெளிப்படையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் நியாயம் நிலைநாட்டப்படும் எனவும் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7H.html

கிழக்கில் அதிகாரம் பகிரப்படவில்லை! முதலமைச்சரின் செயல் பிரச்சினைக்குரியது: கபே
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:11.33 AM GMT ]
கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சகல அமைச்சு அதிகாரங்களும் குவிந்து இருப்பது மிகவும் பாரதூரமான நிலைமையை உருவாக்கியுள்ளது என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி  தென்னக்கோன்கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் நசீர் அஹமட் மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களையும் தன்வசம் வைத்து கொண்டு ஏனைய அமைச்சர்களை நியமிக்காது இருப்பது குறித்து ஆளுநர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபைகள் சட்டத்திற்கு அமைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களை நியமிக்காது சகல அமைச்சுக்களையும் தன்வசம் வைத்துள்ளார். இந்த நிலைமையானது அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பான அடிப்படைப் பிரமாணத்தை மீறும் செயல் என கபே அமைப்பு காண்கிறது.
மாகாண சபை சட்டத்திற்கு அமைய முதலமைச்சர் நான்கு அமைச்சர்களை நியமிக்க முடியும். மாகாண சபை வரலாற்றில் அது செயற்பாட்டு ரீதியானதாக இருந்து வந்துள்ளது. அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதனால், ஒரு நபரிடம் அதிகாரம் செல்வது மாகாண சபை முறைமையை திரிபுபடுத்துவதாகும். மாகாண சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிய பின்னர், வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் வரை சகல அமைச்சுக்களையும் தனது பொறுப்பில் வைத்து கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
தேசிய அரசாங்கத்தின் அடிப்படையில் மாகாணத்தில் அமைச்சு பதவிகளை பகிரப் போவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சு பதவிகளை இதுவரை பகிரவில்லை. இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொண்ட தரப்பும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளன. இதனை தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும், தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தை கிழக்கு மாகாண சபையில் கொண்டுள்ளன.
7 ஆசனங்களை கொண்டுள்ள ஒரு கட்சியின் உறுப்பினர் மாகாண சபையின் அனைத்து பதவிகளையும் தன்வசம் வைத்திருப்பது பாரதூரமான பிரச்சினை எனவும் கபே, கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7I.html

Geen opmerkingen:

Een reactie posten