[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 01:50.46 PM GMT ]
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும் கவலையும் தெரிவித்தும்,
ஐநாவின் விசாரணைக் குழு இலங்கைக்கு நேரடியாக வந்து விசாரணைகளை நடத்த அரசாங்கத்தை அனுமதிக்குமாறு ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விட வேண்டும் எனக் கோரியும்,
எந்த விதத்திலுமான உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்தியும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைக் கோரியும் தமிழ் சிவில் சமூக அமையம் கையெழுத்துப் பிரச்சாரம் ஒன்றை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.
இதன் பொருட்டு இலங்கைத் தீவு வாழ் தமிழர்களின் கையெழுத்துகள் பெருமளவில் திரட்டப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையளருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu2G.html
தேசிய அரசாங்கம் அமைத்தால்,பாராளுமன்றில் எதிர்க்கட்சி த.தே.கூட்டமைப்பே!- உதய கம்மன்பில
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 03:37.37 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த வேண்டும் என்று எழுந்த சூடான மக்கள் எழுச்சிக்கு ஐஸ் பக்கட்டினால் மேற்கொள்ளும் ஒரு தாக்குதலாகத் தான் இந்த தேசிய அரசாங்கம் எனும் எண்ணக் கருவைப் பார்க்கின்றோம்.
இந்த தேசிய அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த தேசிய அரசாங்கம் எனும் யோசனையினால் மக்களுக்கு அரசாங்கம் அழிவை ஏற்படுத்துகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அதிலுள்ளவர்களுக்கு சலுகைகளை வழங்கி, அரசாங்கம் செய்யும் தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியே இதுவாகும்.
அத்து்ன், பிரதான இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தலைதூக்குவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இரு குழுக்களிடையே மோதல்: பாதாள உலகக்குழு உறுப்பினர் பலி
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 04:16.24 PM GMT ]
தென் மாகாணத்தில் பாரியளவு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்து புத்தா எனப்படும் நிசாந்த ஜயவர்தனவே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார்.
பெலியத்த ஹம்புஸ்ஸாவெல பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ரத்து புத்தா கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்க சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் அருகதை இல்லையாம்! குமுறும் உறுப்பினர்கள்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 04:22.25 PM GMT ]
இன்று தமிழ்த் தலைமைகள் என்று தங்களை காட்டிக்கொண்டிருக்கும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சட்டத்தரணியுமான சுமந்திரனும் எமது தலைமைகளைப் பற்றி கதைப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள் என கல்முனை மாநகரசபையின் மு.கா உறுப்பினர்களான முளக்கம் மஜித், மற்றும் றக்கிப் லோயர் ஆகியோர் கூறினர்.
நேற்று கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு கல்முனை மாநகரசபை முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், த.தே.கூட்டமைப்பின் தலைமைகளை பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்த செயலாகும் என அந்நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதி மேயர் மஜித்தும், றக்கிப்பும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலங்களாக த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் தங்களது கட்சி சார்ந்தவர்களையும் எமது கட்சியையும் மிகவும் கீழ்தரமாக விமர்சித்து வருகின்றார்கள். சம்பந்தனும், சுமந்திரனும் எமது தலைமைகளை பற்றி இனிமேலும் விமர்சிக்கக்கூடாது அவ்வாறு விமர்சிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
எமது தலைமை 13 திருத்த சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக அயல் நாட்டில் இருந்தவாறே உடனடியாக இங்கு வந்து தமிழ் மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர்.
அப்படிப்பட்டவர்களை இவர்கள் அவதூறு செய்வதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதே போன்று ஐ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தயா கமகே, அம்பாறையில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் வந்து அரசியல் செய்யக்கூடாது எனவும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறமாட்டேன் அத்தோடு முஸ்லிம்மக்களின் அனுசரனை இன்றி அம்பாறையில் தயா கமகே எம்.பியாக வர முடியாது எனவும் கூறினார்.
இந்த அமர்வில் கருத்துரைத்த த.தே.கூட்டமைப்பின் உறுப்பினரான எஸ்.ஜெயக்குமார் கருத்துரைக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸ் இன்று 13வது திருத்தச்சட்டத்தினை பற்றி பெரிதாகக் கூறுகின்றார்கள் ஆனால், ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் புறந்தள்ளும் 17வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்ததோடு, கிழக்கு மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும திட்டத்தினையும் ஆதரித்து தமிழ் மக்களை புறக்கணித்தவர்கள் தான் நீங்கள் என்பதனையும் இது போன்ற பல விடயங்களை தமிழ் மக்களும் மறக்க முடியாத அளவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு இருக்கின்றது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu3C.html
Geen opmerkingen:
Een reactie posten