[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 09:15.25 AM GMT ]
வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாம்களில் நீண்டகாலம் வசிப்பவர்களுக்கு அதே இடத்தில் காணி வழங்கி, குடியமர்த்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
�இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பானது..� என்ற தலைப்பிட்டு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
இந்தியாவிலிருந்து 1996 ஆண்டுகளில் வருகை தந்த ஒருதொகுதியினர் வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெருமளவிலானோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமாகவுள்ள ஒருதொகுதியினர் தொடர்ந்தும் அதே பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வடககு மாகாணத்தில் வேறெந்த பகுதியிலும் சொந்தக்காணி இல்லாத நிலையில் இவர்களை குடியிருக்கும் அதே இடத்தில் காணிகளை வழங்கி குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சிதம்பரபுரத்திலுள்ள மேற்படி மக்கள் வாழ்ந்து வருகின்ற காணி 2013 ஆண்டில் அரச நிலஅளவையாளர்களால் நில அளவீடு செய்யப்பட்டு,Va/VAV/2013/331 இலக்க நில அளவை வரைபடமூலம் 41.7491 ஹெக்ரேயராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 29,4409 ஹெக்ரேயர் மக்கள் குடியிருப்பு அமைப்பதற்கும், (ஒவ்வொரு குடும்பத்திற்கும் 0.1518 ஹெக்ரேயர் ஒதுக்கப்பட்டுள்ளது) 5.8300 ஹெக்ரேயர் பொது தேவைக்கும், 6.4782 ஹெக்ரேயர் உள்ளக வீதி அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிதம்பரபுரத்தில் 177 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் பூந்தோட்டத்தில் 70 குடும்பங்கள் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.
புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பூந்தோட்டத்திலுள்ள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மக்கள் நடமாற்றமற்ற காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் மீள்குடியேற்றம் செய்வதற்கு மாவட்ட செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா வடக்கில் தெரிவு செய்யப்பட்ட பகுதியானது காட்டுப்பகுதி மட்டுமல்லாது, மழைகாலத்தில் வெள்ளம் நிற்கக்கூடிய குடியிருப்பு அமைப்பதற்கு பொருத்தமற்ற காணியாகும்.
அன்றாட வருமானமாக பெரும்பாலும் கூலித்தொழிலை செய்துவரும் இக்குடும்பங்களின் தமது வாழ்வாதாரத்திற்காக வவுனியா நகரத்திலேயே தங்கியுள்ளனர்.
அத்துடன் இவர்களது பிள்ளைகளும் தமது கல்வியை நகரப்பாடசாலைகளிலேயே தொடர்கின்றனர். எனவே இவர்களை சிதம்பரபுரத்திலேயே காணிகளை பகிர்ந்தளித்து குடியேற்றுவதே சாலப்பபொருத்தமாகும்.
ஆகவே தயவுகூர்ந்து தங்கள் பிரதிநிதியொருவரை வவுனியா மாவட்டத்திற்கு அனுப்பி உண்மையான களநிலவரத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்வதோடு, தங்களின் நடவடிக்கைகளுக்கு மாவட்ட மட்டத்தில் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயாராவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன் தமிழக முதலமைச்சரை சந்திக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 09:21.01 AM GMT ]
அவர் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதினால் தமிழர்களின் மத்தியில் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது.
அத்துடன் சிங்களக் கடும் போக்காளர்கள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்றை நடத்தி மீண்டும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகளை பெறும் நோக்கில் தற்போதைய இலங்கை அரசாங்கம் காய் நகர்த்தி வருகின்றது.
எனினும் தமிழர்களின் இந்நிலைமை குறித்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித கவலையுமின்றி இருக்கின்றார் என தொல்.திருமாவளவன் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், இராணுவத்தினர் கையகப்படுத்திய தமது காணிகளை ஒப்படைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்திய போதிலும் அதற்கு தற்போதைய அரசாங்கம் பதிலளிக்காமல் அசமந்த போக்குடன் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிகட்ட யுத்தத்தின் போது விசுவமடு பகுதியில் முப்பத்தைந்தாயிரம் தமிழர்களின் சடலங்கள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை மேற்கொண்டவர்கள் கூறியதாக மன்னாள் ஆயர் தெரிவித்திருப்பது இனப்படுகொலைக்கு சான்றாக அமைந்துள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்ற நிலையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித தடையுமின்றி மீன் பிடிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் முன்வைத்த ஆலோசனையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி இரு நாட்டு மீனவர்களுக்கிடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையையும் இலங்கை அரசாங்கம் சுயநலமாக இரத்து செய்து விட்டது.
ராஜபக்ஷ சீனாவுக்கு சார்பானவர், மைத்திரிபால அப்படியானவர் அல்ல என கூறப்பட்ட போதிலும், சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை இரத்து செய்யமுடியாது என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பிரச்சினையிலும், தமிழக மீனவர்களின் பிரச்சினையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இந்தியாவை பலவீனமாக காட்டும்.
அது மாத்திரமல்லாது, இலங்கையின் இனப்படுகொலை அரசாங்கத்திற்கு ஒப்புதலாகவும் அமைந்து விடும் என அவ் அறிக்கையில் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் தமிழக மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் தமிழக முதலமைச்சரோடு கலந்தாலோசிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt2C.html
பொலிஸார் தேடும் குமார் குணரத்னம் ஊடகத்திற்கு கடிதம் மூலம் அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 09:48.13 AM GMT ]
குறித்த கடிதத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் ஓர் சிங்கப்பூர் பிரஜை எனவும் ஒரே நாளில் அவருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஜோன் அமரதுங்க இவ்வாறு குடியுரிமையை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கும் குடியுரிமை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திற்கு வருவதற்கு முதல் நல்லாட்சி ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.
எனினும் நடைமுறைபடுத்தவில்லை, வேறு வார்த்தையில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செய்யும் போராட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்.
அதற்காக மக்கள் அணி திரள வேண்டுமேன குமார் குணரட்னம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நானுஓயா பிரதேச தோட்டமொன்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 09:53.21 AM GMT ]
இங்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், தோட்டத்தில் 39 ஹெக்டயர் தேயிலை மலை பராமரிக்கபடாமல் மூடபட்டுள்ளதாகவும், இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இதன் காரணமாக வாரத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்கள் வேலை வழங்கப்படுவதால் வருமானம் குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் புதிதாக தொழிலுக்கு சென்றவர்களை பதிவு செய்யப்படாமல் நாள் சம்பளம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.
வைத்தியசாலை சேவைக்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டி இரண்டு வருடமாக தோட்ட தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் தோட்ட லொறியில் கொண்டு செல்லப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகின்றது.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் உடரதல்ல தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கறுப்பு கொடி வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தி;ல் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஆறுமுகம் தொண்டமான் கலந்துரையாடல்- ஸ்ரீபாத கல்லூரிக்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன் விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:46.04 PM GMT ]
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமிய பவன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், ஒவ்வொரு தோட்டங்களிலும் உள்ள முகாமையாளர்கள், ஹெரண பெருந்தோட்ட கம்பனியின் நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில், மேற்கூறப்பட்ட தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளான தோட்டங்களில் புதிதாக ஆண், பெண் தொழிலாளர்களை புதிதாக பெயர் பதிவு செய்தல், தற்காலிகமாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தரமாக வேலையில் அமர்த்துதல்,
தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கப்படாமல் மூடப்பட்ட தேயிலை மலைகளில் தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்காக நிலத்தினை சுத்தப்படுத்தி கொடுக்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளிடம் பணித்துள்ளார்.
மேலும் தேயிலைச் செடிகளுக்கு உரம், கிருமி நாசனிகள் தெளிக்கப்படாமை, தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை தூள் தரம் குறைந்தவையாக வழங்கப்படுதல், இத்தோட்டங்களில் தொழிலாளர்களின் அவசர தேவைகளுக்கு வாகனங்களை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களை கொண்டு செல்லுதல், திடீரென தொழிலாளர்களுக்கு குளவி கொட்டுதல், தொழிலாளர்கள் சுகவீனமடைதல் போன்ற அவசர தேவைகளுக்காக வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு கூரை தகடுகளை மாற்றுதல், சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்,
குறித்த தோட்டங்களில் மூடப்பட்ட தேயிலை மலைகளில் வேலையற்ற இளைஞர், யுவதிகளின் வருமானத்தை பெருக்கி கொள்ளும் நோக்கில் அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தல், சம்பந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், அம்பகமுவ பிரதேச சபை தலைவர் தினேஷ், இ.தொ.காவின் அலுவலக பிராந்திய பிரதிநிதிகள், தோட்ட தலைவர்கள், தலைவிகள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீபாத கல்லூரிக்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன் விஜயம்
இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கலாசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அமைச்சரின் தலைமையில் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன, ஸ்ரீபாத கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் உட்பட விரிரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt3G.html
Geen opmerkingen:
Een reactie posten