தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

தேசிய அரசாங்கம் வேண்டாம்!- ஜே.வி.பி. - உரிய நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ரில்வின் சில்வா

ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம்!- எஸ்.பி. நாவின்ன
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:28.29 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கைதியாக மாறுவதற்கு இடமளிக்க முடியாது.
இதன் காரணமாக எதிர்வரும் அரசாங்கத்தினால் நிறுவப்பட உள்ள தேசிய அரசாங்கத்தின் பதவிகளை ஏற்றுக்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளது.
உருவாக்கப்பட உள்ள தேசிய அரசாங்கத்தின் தன்மை பற்றி சரியாக இன்னமும் தெரியாது.
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானங்களை எடுக்கவில்லை.
நாட்டை பற்றி சிந்தித்தே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை வெற்றியடைச் செய்ய உச்ச அளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் வேண்டாம்!- ஜே.வி.பி. - உரிய நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ரில்வின் சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:37.34 AM GMT ]
தேசிய அரசாங்கம் வேண்டாம் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஒன்றை நடாத்தாமல், நாடாளுமன்றின் காலத்தினை நீட்டிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
பொதுத் தேர்தலின் பின்னர் அந்தந்த கட்சிகளுக்கு தேவையான வகையில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும்.
தேசிய அரசாங்கமொன்றில் ஜே.வி.பி அங்கம் வகிக்காது என சிங்கள பத்திரிகையொன்றுக்கு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிய நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ரில்வின் சில்வா
உரிய நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது எமது கட்சி எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை.
பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. கட்சி தனித்தே போட்டியிடும்.
பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கின்றது.
எனினும் அவ்வாறு தேர்தலை ஒத்தி வைக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது.
ஜனாதிபதியின் 100 நாள் திட்ட யோசனையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியை மீறும் முயற்சிகளை சில தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என ரில்வின் சில்வா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி சேர்வது தொடர்பில் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyCRYSUntyF.html


Geen opmerkingen:

Een reactie posten