தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

எதிர்பார்த்தது வெள்ளி திசை – நடந்து கொண்டிருப்பது வியாழமாற்றமா? சனி மாற்றமா?

யோகேஸ்வரி கணவருக்கு வாய்க்கு அரிசி இட்டார் டக்ளஸ்….

காலஞ்சென்ற தோழர் பற்குணராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிநிகழ்வில் அஞ்சலி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது சிறுபராயத்திலிருந்து அமரர் பற்குணராஜாவை நான் நன்கறிவேன் என்பதுடன் நான் கற்ற பாடசாலையில்தான் இவரும் கல்வி கற்றிருந்தார். அத்துடன் தானும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு தன்னை சூழவுள்ள ஏனையவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் இயல்பை இவர் கொண்டிருந்தார்.
அமரர் பற்குணராஜா அவர்களின் இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்ல எமது கட்சிக்கும் பேரிழப்பாகுமென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன், யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் பாலசிங்கம், வடமாகாண திறைசேரியின் கணக்காளர் பத்மநாதன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மங்களநேசன், தோமஸ் மத்தியூஸ், சின்மயானந்த மிசன் சைத்யன்ய சுவாமிகள் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் இடம்பெற்றன. Epdp 01Epdp 02Epdp 03Epdp 04Epdp


எதிர்பார்த்தது வெள்ளி திசை – நடந்து கொண்டிருப்பது வியாழமாற்றமா? சனி மாற்றமா?

பிரதம நீதியரசர் மொகான் பீரிஸை பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவனை நியமித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா.
வரவு செலவுத்திட்டத்தை ரணில் தலைமையிலான அரசாங்கம் தயாரித்தது.
இராணுவப்பட்டங்களையும் பதவி அடையாளங்களையும் இழந்திருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அத்தனை தகுதி நிலைகளையும் மீளக் கொடுத்தார் மைத்திரி.
புதிய வெளியுறவுக் கொள்கைகளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மங்கள சமரவீர.
கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சரை நியமித்திருக்கிறார் மைத்திரி.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது ரணில் தலைமையிலான அரசாங்கம்.
இப்படி ஒரு ஓட்டம் இலங்கை அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
ஜனாதிபதி பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்.
எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்திருக்கிறது.
இந்த ஆட்சி அமைப்பு விவகாரமே சட்டம் மற்றும் பொது விதிகளுக்கு மாறாக நடந்திருக்கிறது.
பிரதம நீதியரசர் நியமனங்களும் பதவி பறிப்புகளும் பச்சை அரசியல்தனமாக நடந்திருக்கின்றனவோ என்று சாதாரண மக்களே சந்தேகப்படுகிற அளவுக்கு நிகழ்ந்து முடிந்திருக்கின்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் ஜனாதிபதி மாற்று முடிவை எடுத்திருக்கிறார்.
இது ஒருபக்கம் என்றால் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்கிற தமிழரசுக்கட்சி.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட தமிழரசுக் கட்சியை நிராகரித்து விட்டு குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு வாய்ப்பைக் கொடுத்திக்கிறார் ஜனாதிபதி.
கொழும்பில் அரசாங்கத்தை ஆதரிக்கின்ற – அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கிற தமிழரசுக் கட்சி, வடக்குக் கிழக்கில் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் காட்டுகிறது. அரசை எதிர்த்துப் பிரேரணைகளை நிறைவேற்றுகிறது. நிறைவேற்றிய பிரேரணையின் சூடு ஆறமுன்பு ஜனாதிபதியின் காலடியில் போய் நிற்கிறார் வடமாகாண முதலமைச்சர்.
முக்கியமான பிரச்சினைகளை யாரோடு கதைப்பது? யார் மூலமாக அவற்றுக்குத் தீர்வு காண்பது? மைத்திரியிடம் போவதா? ரணிலிடம் பேசுவதா? என்று தெரியாமல் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தடுமாறுகிறார்கள்.
இதற்குள் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் காரியங்களைப் பார்க்கின்றன.
100 நாள் வேலைத்திட்டத்திற்குள் இலங்கையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவம். அதற்குப் பிறகு நடக்கவுள்ள தேர்தலில் தங்கள் கையே ஓங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன.
என்னதான் நடந்தாலும் தன்னுடைய ட்ராகன் பிடியைக் கெட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக நிற்கிறது சீனா.
இதற்குள் – இந்த அமளிக்குள் போர்க்குற்ற விசாரணையை தூக்கி கிடப்பில் போட்டு விட யோசிக்கிறது மேற்குலகம்.
மேற்கை நம்பி கையை உயர்த்திய தமிழ்த்தரப்பு – தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியச் சக்திகளும் வழமையைப்போல கையாலாகாத் தனத்தோடு விரல் சூப்பிக்கொண்டிருக்கின்றன.
நல்லாயிருக்கு புதிய மாற்றம்.
இது வியாழ மாற்றமா? சனி மாற்றமா என்று தெரியவில்லை யாருக்கும்.
http://www.jvpnews.com/srilanka/98459.html

Geen opmerkingen:

Een reactie posten