[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:12.41 AM GMT ]
முன்னைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தாம் உள்ளிட்ட தரப்பினர் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் வெற்றி பெறுவோமா, இல்லையா என்பதை கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எம்முடன் இருந்தனர்.
எம்மீது நம்பிக்கை வைத்து எமக்காக வாக்களிக்குமாறு நாங்கள் மக்களிடம் கோரினோம்.
மக்களுக்கு கெடுதல்களை செய்யும் நபர்களை அரசாங்கம் இன்னும் கைது செய்யாமல் இருப்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
எனினும் உண்மையில், நல்லாட்சி மற்றும் உத்தேச செயற்பாடுகளை முன்னெடுக்க காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.
குற்றச் செயல்கள் , குறிப்பாக கொலை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதற்காக நாம் நமது பலத்தை பயன்படுத்த வேண்டும்.
அந்த செயற்பாடுகளில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். சாதாரண நபர்கள் அதனை உணரவேண்டும் எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyC.html
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சுதந்திரக் கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:21.51 AM GMT ]
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்தல் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அது சம்பந்தமான கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் நேற்று ஆரம்பமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கான பயிற்சி பாசறை இதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த பயிற்சி பாசறை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மாத்திரமின்றி குறிப்பாக வர்த்தக சமூகங்களுக்கு மத்தியில் நிலையான தேசிய அரசாங்கம் தொடர்பான ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, நிலையான நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஸ்திரமான தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவித்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyD.html
Geen opmerkingen:
Een reactie posten