தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 oktober 2011

மிக கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபி!!


சரணடைந்த கோழை கடாபியும் சரணடைதவனை அடித்தே கொன்ற லிபிய பேய்களும் அதனை பாராட்டிய உலக தலைமை அரக்கர்களும்


மனிதாபிமானம் பற்றி வாய் கிழியப்பேசும் ஐரோப்பிய அரசுகள் கடாபி கொல்லப்பட்டதை வரவேற்றதும் அங்குள்ள மனிதாபிமான அமைப்புகள் எனச்சொல்லப்படுபவை மௌனம் சாதிப்பதும் அவர்கள் மனிதர்களே அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தவே இல்லை.சரணடைந்தவனை அடித்தே கொன்ற அரக்கர்களை பாராட்டி தம்மை வெளிப்படுத்திய இவர்களை யார் தண்டிப்பதோ??

donderdag 20 oktober 2011

படமெடுத்த புலனாய்வுத்துறையினரை படமெடுத்த தமிழர்கள் !

19 October, 2011

தமிழ்த்தலைமைகள் தமிழரை கொள்ளையடிக்க சிங்களம் பரவாயில்லை என தொடர்ந்து குமுறும் தமிழ் மக்கள் !!

சம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது!‏
-திருமலை அமுதன்
தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் ஈழத் தமிழர்களுக்கு அறிமுகமானவர் திரு. இரா சம்பந்தன். தமிழினத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வெற்றிடங்கள் ஏற்பட சம்பந்தன் தமிழினத்துக்குத் தலைவர் ஆகிவிட்டார். இவர் தமிழினத்துக்காக இதுவரை எந்தத் தியாகத்தையும் செய்தது கிடையாது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார். தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இவரது வளர்ச்சிக்கு உதவி வந்தது. இறுதியாக தலைமைக்குப் பஞ்சம் எற்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகளின் புண்ணியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக்கும் தலைவர் ஆனார் திரு. சம்பந்தன்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிதான் தமிழ் இனத்தின் அதி உயர்ந்த பதவியாகும். ஈழத்தில், அதற்கும் மேலான பதவி மந்திரி பதவியாகும். டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளீதரனும் எம்.பி. பதவியையும் தாண்டி மந்திரிப் பதவியை வரித்துக்கொண்டுள்ளனர். பதவிகளை அடைய சம்பந்தன் போன்றவர்களுக்கும் விருப்பம்தான். ஆனால் தமிழர்கள் துரோகி என்று கூறி முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தினால் இந்த எம்.பி. பதவியே போதும் என்று கண்டனர். சம்பளமும், சலுகைகளும் கூடவே அதிகாரமும் கிடைக்கும் போது இதனை எக்காரணம் கொண்டும் நழுவவிடாது பார்த்துக் கொண்டு மேலும் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது இவர்களது குறிக்கோள் ஆகும்.