தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

ஜெனீவாவில் நீதி கிடைக்குமென தமிழர்கள் கற்பனை செய்யக் கூடாது: நிலாந்தன்/குறைந்த உயிர்த் தியாகங்களுடன் அற்ப விடயங்களை பெறாத நாம், இப்பொழுது அதைப் பெறுவதா? அரியம் எம்.பி.கேள்வி



குறைந்த உயிர்த் தியாகங்களுடன் அற்ப விடயங்களை பெறாத நாம், இப்பொழுது அதைப் பெறுவதா? அரியம் எம்.பி.கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 03:48.20 PM GMT ]
சர்வதேச ரீதியாக எமது இனத்தின் போராட்டம், உரிமைப் பிரச்சனை அறியப்பட்ட நிலையில் அதை மீண்டும் உள்ளக விசாரணை என்ற போர்வைக்குள் மூடி புதைக்க முடியாது.
கடந்த காலங்களில் பல்வேறு ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் சிங்கள அரசாங்கங்களோடும், சர்வதேச நடுநிலைமைகளோடும் நடந்தேறின.
அப்போதெல்லாம் நாம் குறைந்தளவு தியாகங்களை செய்திருந்தோம். குறைந்த அளவு உயிரிழப்புக்களை கொண்டிருந்தோம்.
அந்த நேரங்களில் பெற்றிருக்ககூடிய அற்ப தீர்வுகளை இன்று எப்படி பெறமுடியும். நமது இனம் இன்று செய்திருக்கின்ற தியாகத்தின் உச்சம் எவ்வளவு என பா.உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சி கூட்டுறவுக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஜெனீவா தீர்மானம் மெய்நிலையும் அரசியலும் என்ற தொகுப்பு நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4J.html


ஜெனீவாவில் நீதி கிடைக்குமென தமிழர்கள் கற்பனை செய்யக் கூடாது: நிலாந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 03:21.30 PM GMT ]
ஜெனீவாவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் ஜெனீவா நீதிமான்களின் அரங்கு என்றும் தமிழர்கள் கற்பனை செய்யக் கூடாது என ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. அங்கே தமிழர்களின் இரத்தத்தைப் பற்றியும் காயங்களைப் பற்றியும் துயரங்களைப் பற்றியும் தான் உரையாடுகிறார்கள்.
தமிழர்களைப் பற்றித் தான் அங்கே எல்லாம் நடக்கின்றது. ஆனால் அங்கே தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. இது தான் ஜெனீவாவின் மெய்நிலை.
அது தமிழர்களுக்கான அரங்கு அல்ல. ஐ.நா எனப்படுவது அரசுகளின் அரங்கு.
சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழர்கள் அங்கே துருப்புச் சீட்டுக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு அங்கு ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
சீனாவுக்கு விசுவாசமான சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, அதன் வெளியுறவுக் கொள்கையில் சீனாவுக்குச் சார்பான நிலவரங்களில் வரையறைகளை ஏற்படுத்துவதற்காக தமிழர்களின் விவகாரம் ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாக சக்தி மிக்க நாடுகளால் கையாளப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4H.html

Geen opmerkingen:

Een reactie posten