வெளிநாட்டிலிருந்து தஞ்சம் கோர வரும் அகதிகளை சுவிஸ் அரசாங்கம் மோசமாக நடத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்பு சபையான Amnesty International நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சுவிஸ் சித்ரவதை தடுப்பு தேசிய ஆணையம்(Swiss National Commission for the Prevention of Torture (NCPT) மற்றும் பல அரசு சாராத நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்த மனித உரிமை மீறல்களை கோடிட்டு காட்டியுள்ளது.
மேலும் சுவிசில் உள்ள அகதிகள், அந்நாட்டிற்கு தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களை மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தது.
தஞ்சம் கோருபவர்களுக்கு செளகரியமாக சுவிசிலிருந்து திருப்பி அனுப்பப்படும் மக்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விமான நிலையம் வரை மிகுந்த வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
http://www.coolswiss.com/view.php?22eOld0bcGa0Qd4e2KMM302cBnB2ddeZBnV203egAA2e4K0asacb3lOo43
|
Geen opmerkingen:
Een reactie posten