தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

யாழ். பல்கலை. கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்.ஊடக அமையம் முழுமையான ஆதரவு தெரிவிப்பு!

புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் விமல் வீரவன்ச ஆஜர்! - விமலின் கோரிக்கையை நிறைவேற்றிய புலனாய்வுப் பிரிவினர்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 05:26.20 AM GMT ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னதாக விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வு பிரிவிற்கு சென்றுள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
தற்போது புலனாய்வுப் பிரிவில் வாக்கு மூலம் அளித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை நேற்று மாலை பொலிஸார் மாலம்பே பிரதேசத்தில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமலின் கோரிக்கையை நிறைவேற்றிய புலனாய்வுப் பிரிவினர்
நுகேகொடையில் சமீபத்தில் மகிந்தவுடன் நாட்டை வெற்றிகொள்வோம் என்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது மனைவி தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச முறைகேடான நிலையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பற்றி கூட்டத்தில் விமல் வீரவன்ஸ கருத்து வெளியிட்டு இருந்தார்.
எனது மனைவியை இன்று கைது செய்வார்கள் நாளை கைது செயவார்கள் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் கைது செய்ய எவரும் வருவதில்லை, வாக்குமூலமும் பெறுவதில்லை. வாக்குமூலம் பெறும் வரை நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
இதை எல்லாம் கூறி எங்கள் பயணத்தை நிறுத்த முடியாது  என விமல் வீரவன்ச கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் அவ்வாறு தெரிவித்த போதிலும் விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுகேகொடை பேரணிக்கும் ஷசி வீரவன்சவின் கைதுக்கும் தொடர்பில்லை: அஜித் ரோஹன
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கைது செய்யப்பட்டமைக்கும் சமீபத்தில் நுகேகொடையில் இடம் பெற்ற பேரணிக்கும் இடையில் சம்பந்தம் உள்ளதாக பேசப்படும் கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு எதிராக கிடைக்கப்பபெற்ற முறைபாடு தொடர்பாக விசாரணைகள் கடந்த சில வராங்களுக்கு முன்னரே ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஷசி வீரவன்சவை சட்ட வைத்திய அதிகாரிகள் மூலம் விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதோடு இன்றைய தினம் நீதி மன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீரவன்ஸவுக்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்: கடுவலை மேயர்
போலி ஆவணங்களை தயாரிக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு இரு தண்டனைகளை வழங்க முடியும் என கடுவலை மாநகர மேயர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர கடவுச்சீட்டை போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வீரவன்ஸவின் மனைவி சசி வீரவன்ஸ நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ராஜதந்திர கடவுச்சீட்டை போலியாக செய்து கொண்டமை காரணமாக கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ஸவின் மனைவிக்கு வழங்கும் தண்டனை போல், அதற்கு உதவியமை, உடந்தையாக இருந்தமை சம்பந்தமாக வீரவன்ஸவுக்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் புத்ததாச கூறியுள்ளார்.
விமல் வீரவன்ஸவுக்கு ஒரு சட்டமும் சாதாரண நபர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும் புத்ததாச சுட்டிக்காட்டியுள்ளார்.
வீரவன்ஸவின் மனைவிக்கு சுகவீனம்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷசி வீரவன்ஸ சுகவீனமுற்றிருப்பதால், அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த முடியவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வீரவன்ஸவின் மனைவி மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் அறிவித்தனர்.
வீரவன்ஸவின் மனைவி சுகவீனமுற்றிருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நிலைமையில் அவர் இருக்கின்றாரா என்பதை கண்டறிய சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதி வழங்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஷசி வீரவன்ஸ கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் கடந்துள்ளதால், புலனாய்வுப் பிரிவினர் சட்ட வைத்திய அதிகாரியை கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.


விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 12:37.41 PM GMT ]
சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலியான தகவல்களுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியமை சம்பந்தமான விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சஷி வீரவன்ஸ, தான் கைது செய்யப்படவிருப்பதை அறிந்து கொண்டதை அடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பாரிய கொள்ளை, ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள தனது கணவர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் ஒப்பிடும் போது சிறிய தவறை செய்த தன்னை போன்றவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் எனக் சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டுள்ளார்.
அத்துடன் தனது கணவருடன் இருந்த கொள்ளையர்கள், ஊழல்வாதிகள் சம்பந்தமான அவர் விபரமான தகவல்களை அமைச்சரிடம் கூறியுள்ளார். குறிப்பாக தனது கணவரான விமல் வீரவன்ஸவின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விரிவான தகவல்களை அமைச்சர் ராஜிதவிடம் சஷி வழங்கியுள்ளார்.
கொழும்பு டாலி வீதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணியை போலி காணி உறுதியை செய்து விற்றமை, கொழும்பு துறைமுகத்திற்கு கருங்கல் விநியோகிகத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றமை, தார் அனுமதிப்பத்திரத்தை பெற்றமை, சலாக உரிமையாளரான பெண்ணுடன் இணைந்து சர்வதேச வர்த்தகர்களுடன் மேற்கொண்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான விபரமான தகவல்களை சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜிதவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர வேறு முறைகேடான கொடுக்கல், வாங்கல்கள் பற்றியும் கூறியுள்ளார். அத்துடன் விமல் வீரவன்ஸவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பெண்கள் பற்றிய தகவல்களையும் சஷி வீரவன்ஸ வெளியிட்டுள்ளார்.
இந்த சகல விடயங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதன் பின் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அறிந்து கொண்ட விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீரவன்ஸ தம்பதியினர் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஒற்றுமையாக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதாகவும் இந்த சம்பவத்துடன் அந்த பிரச்சினை மேலும் முற்றியுள்ளதாகவும் பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns6J.html

யாழ். பல்கலை. கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்.ஊடக அமையம் முழுமையான ஆதரவு தெரிவிப்பு!
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 12:03.55 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சர்வ தேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்பதே யதார்த்தமாகும். அந்தவகையில் தமிழ் மக்கள் ஐ.நா சர்வதேச விசாரணையினை நீதி பெறுவதற்கான சந்தர்ப்பமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழ் மக்களின் அத்தகைய எதிர்பார்ப்பு நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஐ.நா சர்வதேச விசாரணையினை மார்ச் மாதத்திலேயே வெளியிடக்கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்.ஊடக அமையம் ஊடகரீதியான முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது.
குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பல ஊடவியலாளர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போனார்கள். மேலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் போர் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துள்ளபோதும் அவ்வாறான காணாமல்போதல்கள், படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை.
மாறாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையே சாதாரண பொதுமக்களுக்கும் நடைபெற்றமை வரலாற்றுப் பதிவுகளில் காணக் கிடைக்கிறது.
உள்ளக விசாரணை பொறிமுறையில் தமிழ் மக்கள் தமது நீண்டகால அனுவங்களின் அடிப்படையில் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் ஐ.நா சர்வதேச விசாரணையே தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான சந்தர்ப்பம் என்பதோடு தமிழ் மக்களின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கும் அது தீர்வாகும் என்பதே அவர்தம் நம்பிக்கை.
ஐ.நா சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணை அறிக்கையினை மார்ச் மாதத்தில் வெளியிடவேண்டும். என நாம் கோருவதுடன். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் நடத்தும் போராட்டத்திற்கு நாம் ஊடகரீதியான முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns6I.html

Geen opmerkingen:

Een reactie posten