தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

போலி வீசாவில் பெல்ஜியம் செல்ல முற்பட்ட பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது

விமலின் மனைவியை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 04:29.47 PM GMT ]
மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர் கொழும்பு வைத்தியசாலையில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரதி வெள்ளிக்கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி வீசாவில் பெல்ஜியம் செல்ல முற்பட்ட பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 04:03.36 PM GMT ]
போலி வீசாவின் ஊடாக பெல்ஜியத்திற்கு செல்ல முயற்சித்த பங்களாதேஸ் பிரஜை ஒருவர் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வீசா ஆவணமொன்றைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து இத்தாலி ஊடாக இந்த பங்களாதேஸ் பிரஜை, பெல்ஜியத்திற்கு பயணம் செய்ய முயற்சித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த பங்களாதேஸ் பிரஜையை, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 581 என்ற விமானத்தின் ஊடாக ரோமிற்கு செல்ல முயற்சித்த போது, அவரது ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
இதன் போது அவர் பயன்படுத்திய வீசா போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பங்களாதேஸ் பிரஜையிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv7F.html

Geen opmerkingen:

Een reactie posten