தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் ஸ்ரீ.சு.கவிற்கு கூறும் ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 03:07.01 AM GMT ]
சட்ட விரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.
மீனவர்களுடன் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்ய உள்ள நிலையில், இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
பெரும்பாலும் இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட 8 பேர் இந்தியாவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 03:12.33 AM GMT ]
ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேர் இந்தியாவின் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருச்சியில் வைத்து இந்த இலங்கையர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து போலி ஏ.ரி.எம்; அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில், 28 வயதான பிரசான்த் மற்றும் 26 வயதான சுமன் ஆகிய இருவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏ.ரி.எம் அட்டைகள், மடிக் கணனிகள், ஒரு லட்ச ரூபா பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாகனமொன்றில் சந்தேகத்திற்கு இடமாக இருந்தவர்களை சோதனையிட்ட போது அவர்கள் ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்டமை கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட நடவடிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 03:29.42 AM GMT ]
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் கூட்டாக இணைந்து கைது செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் குணரட்னம் முன்னிலையாகவில்லை.
இதனால் பொலிஸாருடன் இணைந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குமார் குணரட்னத்தை கைது செய்து அபராதம் விதித்து அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குறித்த அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் குமார் குணரட்னத்தின் பெயரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கறுப்பு பட்டியலில் இட நேரிடும் என நிஹால் ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமார் குணரட்னம் தொடர்பில் தகவல் தெரிந்தால் அதனை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
குமார் குணரட்னம் தொடர்பில் குடிவரவு திணைக்களம் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு விளக்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் மட்டும் அனுபவித்த வரப்பிரசாதங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது: நவீன் திஸாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 03:44.20 AM GMT ]
மஹிந்த ராஜபக்சக்களினால் மட்டும் அனுபவித்து வந்த வரப்பிரசாதங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று ஊழல் மோசடிகள் வீண் விரயங்கள் எதுவும் கிடையாது.
ஒரு குடும்பம் மட்டும் இந்த நாட்டை சாப்பிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது.
ராஜபக்சக்கள் எல்லா இடங்களிலும் குட்டி போட்டிருந்தனர். எல்லா நிறுவனங்கள் எல்லா திணைக்களங்களிலும் ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.
மறந்து விட வேண்டாம் ராஜபக்சக்கள் மட்டும் அனுபவித்த வரப்பிரசாதங்களை முழு நாட்டு மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv2G.html

தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் ஸ்ரீ.சு.கவிற்கு கூறும் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 04:37.44 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலுக்கு உடனடியாக ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அறிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிராந்திய அலுவலகங்கள், இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியினை மீண்டும் புனரமைப்புச் செய்யுமாறு ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சாதகமான நேரத்தில் பொது தேர்தலை வரவழைக்கவும்,  என மத்திய செயற்குழுவினர் ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்கள்.
பிரதமரும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பொது தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியினரும் தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொது செயலாளர் மற்றும் தலைவர்கள் இணைந்து செயற்படுவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். அதேவேளை கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தேர்தல் வேலைகளுக்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv2J.html

Geen opmerkingen:

Een reactie posten