[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 11:59.13 PM GMT ]
பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது எதிர்வரும் மார்ச் 10ம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt5D.html
தேசிய அரசாங்கத்தின் 25 அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பதவிகள் வேண்டும்!- சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:11.04 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமாயின் இவ்வாறு அமைச்சுப் பிரதி அமைச்சுப் பதவிகள் பகிரப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கு தேசிய அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படக் கூடாது.
அமைச்சரவை அமைச்சுக்களின் முக்கிய அமைச்சுக்கள் பல சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த தேசிய அரசாங்கம் 2016ம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதுவரையில் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை.
பெரும்பான்மை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்க தி;ட்டத்திற்கு ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் மாதம் நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென இந்தக் கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt5E.html
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும்!- பொதுபல சேனா
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:23.57 AM GMT ]
தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது மக்களின் தேவைக்காக அல்ல என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு கிருலப்பணையில் நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதன் பின்னரே தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும்.
மக்களின் தேவைக்காக தேசிய அரசாங்கமொன்று அமைக்க முயற்சிக்கப்படவில்லை.
தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே இவ்வாறு தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சிக்கின்றனர்.
நாடு நெருக்கடியான நிலைமைகளை எதிர்நோக்கும் போதே தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படும்.
சுனாமி, பாரிய போர் போன்ற நிலைமைகளின் போது தேசிய அரசாங்கமொன்றை அமைத்து சவால்களை எதிர்நோக்க முடியும். எனினும் தற்போது நாடு அவ்வாறான எந்தவொரு அனர்த்தத்தையோ நெருக்கடியையோ எதிர்நோக்கவில்லை.
அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதற்கான தீர்வு எனன்? அது தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் கொள்ளைகள் என்ன என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டுமென ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt5F.html
பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார்!– பிரசன்ன ரணதுங்க
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:44.05 AM GMT ]
இனவாத முத்திரை குத்தி ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
ஒரு புறத்தில் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்ட மூலம் பற்றி பேசும் அரசாங்கம், மறுபுறத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்ளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன.
இதன் மூலம் நல்லாட்சி பிரதமரின் இரண்டு நாக்குகளை உடைய வழமையான முகம் வெளிப்பட்டுள்ளது.
திவயின, இருதின மற்றும் ரிவிர போன்ற ஊடகங்களின் பெயர்களையும் செய்தி ஆசிரியர்களின் பெயர்களையும் ரணில் விக்ரமசிங்க நேரடியாக குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் நல்லாட்சி அரசாங்கம், ஊடகத்தின் மீது பிரயோகிக்கும் கடுமையான அழுத்தமாகவே கருதப்பட வேண்டும்.
“இந்த ஊடகங்கள் ராஜபக்சவின் மலசல கூடங்களைக் கழுவும் சக்கிலி வேலை செய்வதாக” பிரதமர் குருநாகலில் கூறியுள்ளார்
பாதாள உலகக் குழுத் தலைவரைப் போன்று பிரதமர் நடந்து கொள்கின்றார்.
கடந்த அரசாங்க காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லை என குரல் கொடுத்தவர்கள் இது தொடர்பில் ஏன் அமைதி காத்து வருகின்றார்கள்
கடந்த காலங்களில் பிழைகள் இடம்பெற்றிருந்தால் அதனை சுட்டிக்காட்டி மேலும் பிழைகளை செய்வது நல்லாட்சியாக அமையாது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt5H.html
Geen opmerkingen:
Een reactie posten