தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான புலம்பெயர் தமிழர்களின் விமர்சனம் ஏன்?

பொலிஸார் அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனரா? – ராஜித
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 12:04.08 AM GMT ]
பொலிஸார் தற்போதைய அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனரா என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதா பொலிஸாரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசீ வீரவன்ச, சுதர்மன் ரத்தெலிகொட போன்றவர்களின் குற்றச் செயல்கள், சிலரின் பாரிய குற்றச் செயல்களுடன் ஒப்பீடு செய்யும் போது அவ்வளவு பெரிய விடயமல்ல.
பெண் ஒருவரை கைது செய்யும் போது யார் மனதிலும் இரக்கம் உண்டாகும்.
அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க சிலர் இவ்வாறு செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே பொறுத்திருப்போம்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போர் பற்றிய விபரங்களை நாம் அம்பலப்படுத்துவோம்.
ஆளும் கட்சிக்குள் குற்றவாளிகளை பாதுகாக்கும் டீல்காரர்கள் இருக்கின்றார்கள் என்பதனை ஒப்புக்கொள்கின்றேன்.
வரப்பிரசாதங்கள் மற்றும் வேறும் நன்மைகளுக்காக இவ்வாறு குற்றவாளிகளை சில அரச தரப்பினர் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களும் நானும் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இது குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றோம் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv1D.html

தேர்தலுக்கு தயார்: பாராளுமன்றம் ஏப்ரல் 23ல் கலைப்பு!- பிரதமர் ரணில்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 11:34.41 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும் தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு தயார் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தப் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணை 23ம் திகதி முடிவடைகிறது. நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்காக 100 நாள் வேலைத்திட்டமொன்றை முன்வைத்தோம்.
இதனடிப்படையில் ஏப்ரல் 23ம் திகதி 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒட்சிசன் நிறைவு பெற்று 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும். தேர்தல் நடக்கும் திகதிக்கு ஏற்ப இந்த திகதியில் மாற்றம் செய்யப்படலாம்.
ஏப்ரல் 23ம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடவும் முடியாது. பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இந்தப் பாராளுமன்றம் ஜனவரி மாதம் 8ம் திகதி கலைக்கப்பட இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டதால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எமக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார்கள். இந்த 100 நாட்களில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. அவ்வாறே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது.
அவ்வாறே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கும் அரசிலமைப்பு திட்டத்தை மாற்றுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எமக்கு இந்த விடயங்களை முன்னெடுக்க ஆதரவு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் மார்ச் மாதம் எமது தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இதனடிப்படையில் மார்ச் முதல் வாரத்தில் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் இம்முறை சகலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எமது கட்சியின் செயற்குழு அங்கத்தவர்கள் தேர்தலில் எவ்விதம் செயற்பட வேண்டுமென்பது தொடர்பாக நேற்று கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் எமது அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து போட்டியிட உள்ள சிறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதுடன் அவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் ஆசனங்கள் பிரித்து கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அடுத்து வரக்கூடிய பாராளுமன்றத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவோம். அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து நல்லாட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பலமாக இருக்கும் வகையில் அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகவே, எதிர்வரும் நாட்களில் இருந்து சிறிகொத்தவில் இருந்து எமது தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரத்தில் இருந்து ஊடகவியலாளர் மாநாடுகளும், தேர்தல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படும். இதனடிப்படையில் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு தயார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான புலம்பெயர் தமிழர்களின் விமர்சனம் ஏன்?
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 11:24.04 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.
லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன.
அதற்கு முன்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் இருவரது படங்களும் எரிக்கப்பட்டிருந்தன.
ஐநாவுக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்னவென்று லண்டனில் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்த பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் சசி மகேந்திரன் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றியும் தமிழ்த் தேசத்தின் விடுதலை பற்றியும் தேர்தல் மேடைகளில் கோசங்களை எழுப்பி எமது வாக்குகளை எடுத்துவிட்டு இன்று எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது தான் எமது மக்களின் ஆட்சேபனைக்கு' காரணம் என்று சசி மகேந்திரன் கூறினார்.
குறிப்பாக, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரின் அண்மைக்கால செயற்பாடுகள் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் சசி மகேந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, புலம்பெயர் தமிழ் உறவுகள் நாட்டில் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராமல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள யோகேஸ்வரன், தாங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்று அதன் அடிப்படையிலே நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று புலம்பெயர் உறவுகளால் வலியுறுத்த முடியாது. மக்களின் நிலைமை மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் செயற்பட முடியும் என்று கூறியுள்ளார்.
லண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnv1B.html

Geen opmerkingen:

Een reactie posten