தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

யாழ்.அரச அதிபர்- கனேடியத் தூதுவர் சந்திப்பு: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்



கடத்தப்பட்ட மாணவர் ஐவர் கோத்தா முகாமிலா? அல்லது கொல்லப்பட்டனரா? - தவராசா மன்றில் வலியுறுத்து!
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 05:55.11 AM GMT ]
தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களும் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? அல்லது கொல்லப்பட்டு விட்டனரா? இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளையில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் மாணவர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடற்படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து மாணவர்களின் ஆட்கொணர்வு மனு நேற்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் கியான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
கடற்படையினரால் தெகிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் களனி ஆற்றில் வீசப்பட்டதாகவும், மற்றைய மாணவனான ரஜீவ் நாகநாதன் திருகோணமலைக்கு கடத்திச் செல்லப்பட்டு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 24ம் திகதி கொலை செய்யப்பட்டதாகவும் 22. 02.2015ம் திகதி வெளியான திவயின ஞாயிறு பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனவே கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள மாணவர்கள்-கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது பத்திரிகைச் செய்தியின்படி கொல்லப்பட்டு விட்டார்களா என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்று பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பற்றிய முறைபாட்டை உடனடியாக செய்யும்படி அறிவுறித்தியதுடன், மனுதாரர்களின் முறைப்பாட்டை உடனே பதிவு செய்து் கோட்டை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து இந்த விடயங்களை புலன் விசாரணை செய்யும்படி் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தினார்.
கோத்தா முகாம் உண்டா, அப்படியிருந்தால் எங்கு அந்த முகாம் உள்ளது? கடத்தப்பட்ட மாணவர்கள் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?  என்பது தொடர்பான அறிக்கையை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி கட்டளையிட்டு மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt0E.html

கிளிநொச்சியில் ஒருவர் கொலை
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 06:04.57 AM GMT ]
கிளிநொச்சி, நாதன் குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்வம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த வேலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் 5 பேர் கொண்ட குழுவினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையாளிகளை கைது செய்வதற்காக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் கூறியுள்ளனர்.

இனவாதத்திற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் பேரணி
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 06:20.42 AM GMT ]
இனவாதத்திற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.
சில தரப்பினா நாட்டுக்குள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு போராட்டப் பேரணி நடத்தப்பட உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த பேரணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.
சில தரப்பினர் சில ஊடகங்களையும் இணைத்துக் கொண்டு மீண்டும் நாட்டில் இனவாதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இனவாதத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்தப் போராட்டத்திற்கு ஆயத்தமாகுமாறு ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt0G.html

மஹிந்த ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் தண்டிக்கப்படவில்லை!– லக்ஸ்மன் யாபா
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 06:43.42 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் தண்டிக்கப்படவில்லை என அந்த அராசங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் கருணையானவர் என்ற போதிலும் நீதியை காலில் போட்டு மிதிக்க அனுமதிக்க முடியாது.
சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாத சந்தர்ப்பங்கள் காணப்பட்டமையை ஒப்புக்கொள்கின்றேன். அது உண்மைதான்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய முறையில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளித்தவர்களுக்கு அவரும் ஆதரவளித்து வந்தார்.
இளகிய மனம் படைத்தவர்தான் எனினும் அதற்காக சட்டத்தை மிதிக்க இடமளிக்க முடியாது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமை குறித்து மஹிந்த மீது மக்கள் அதிருப்தி அடைந்தார்கள் என முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அவேர்தன தெரிவித்துள்ளார்.


யாழ்.அரச அதிபர்- கனேடியத் தூதுவர் சந்திப்பு: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 07:26.57 AM GMT ]
யாழிலுள்ள ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 2010 இலிருந்து (18, 314) தற்பொழுது 34, 780 ஆக மாற்றமடைந்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்கிற்கும், யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள், தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அபிவிருத்தி தொடர்பாக கேட்டறிந்து கொண்ட தூதுவர், இவ் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமது நாட்டினால் உதவிகள் வழங்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தார்.
யாழில் 2010ம் ஆண்டு 16 வீதமாக இருந்த வறுமை மட்டம் தற்பொழுது 8.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்த யாழ் அரச அதிபர்,
யாழ்.மாவட்டத்திலே முதன்மை தேவையாக காணப்படும் வீட்டுத் தேவைகள் தொடர்பாக பல கோரிக்கைகளையும் யாழ் மாவட்ட அரச அதிபர் கனேடிய தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
மேலும் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க உதவுமாறு மாவட்ட அரச அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பில் தமது அரசாங்கத்துடன் கலந்துரையாடி இதற்கான உதவிகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தூதுவர் தெரிவித்தார் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt1D.html

Geen opmerkingen:

Een reactie posten