தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

மைத்திரியின் 100 நாள் வேலைதிட்டத்திற்கு முரணாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 05:36.04 AM GMT ]
இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் இவ்வாறு தம்மை தாக்கியதாகவும் படகுகளையும் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
போத்தல்களையும் கற்களையும் வீசி எறிந்து தமது 10 படகுகளை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக தலைமன்னார் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
300 மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தலைமன்னார் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns3I.html

இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 06:25.58 AM GMT ]
இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்தத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை இராஜாங்க அமைச்சர் துலீப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் எதிர்வரும் 5ம் திகதி சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.
இந்நிலையில் வாரத்திற்கு 3 நாட்கள் எனும் அடிப்படையில் வருடத்திற்கு 120 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி தருமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தே குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடுகின்றமை குறித்து இரு தடவைகள் நேரடி பேச்சுவாரத்தை நடத்தப்பட்டிருந்த நிலையில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns4B.html

மைத்திரியின் 100 நாள் வேலைதிட்டத்திற்கு முரணாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 07:03.35 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு முரணான வகையில் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை மீறி தேர்தலை ஒத்திவைப்பதற்காக பல்வேறு தரப்பினர் பல காரணங்களை முன்வைத்து வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. அதேவேளை தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்த பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் கூறி வருகின்றனர்.
இதனால், தேர்தலை ஒத்திவைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரச வளம் மற்றும் நிதியை கொள்ளையிட்ட மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது பிரதான விடயமாக முன்வைக்கப்பட்டது. எனினும் அது நடைமுறைப்படுத்தப்படாது காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது என்பது நினைவூட்டத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns4F.html

Geen opmerkingen:

Een reactie posten