தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.

வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தாற்போல் பதில் வழங்கியது சர்வதேசம்: ரணில்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 03:56.00 AM GMT ]
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார்.
இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போகின்றார்கள் என செய்தியை வெளியிட்டதாவும், கடந்த 10 வருடங்களாக தன்னை அழித்து, அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர்களால் அதை முடியாமல் போனதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns3A.html


கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 06:45.18 AM GMT ]
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு என்ற தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் பார்ப்பதாக டெல்லியை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு தமிழர் சார்பில் செயற்படுமா? எனும் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள்.
தமிழர்கள் பல்வேறு பகுதிகளால் ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எமது தாமதங்கள் ஆபத்தாகும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எங்கள் செயற்பாடுகள் என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையின், சிறப்பு வட்ட மேசையில் கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் நிர்மானுசன், ஆகியவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns4E.html

Geen opmerkingen:

Een reactie posten