சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகி உள்ளன. அது குறித்து மாவோயிஸ்ட் ஆதரவு தகவல் மையம் வெளியிட்ட விரிவான அறிக்கை…
துணை இராணுவ மற்றும் சத்தீஸ்கர் போலீஸ் படைகளால், பெண்கள் கெரில்லாக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்போம்!
அக்டோபர் 8, மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் சட்டீஸ்கர் காவல் படைகள், மாவட்ட காவல் படைகள் மற்றும் கோயா கமாண்டோக்கள், பிஜப்பூர் மாவட்டத்தில் பொட்டம் (பொட்டெனர்) கிராமத்தில் கொரில்லா குழுவினரை தாக்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பெண் தோழர்கள் பூனம் ஜமிலி, மத்கம் ரம்பத்தி மற்றும் மத்கம் லட்சுமி தியாகியாயினர். மத்கம் ரம்பத்தி துப்பாக்கி சூடு நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
பூனம் ஜமிலி காயம்பட்டிருந்த வேளையிலே மத்கம் லட்சுமி படுகாயம் அடைந்தார். இராணுவத்தினர் காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். காவல் துறை பூனம் ஜமிலியின் நிர்வாண உடலை புகைப்படங்களை எடுத்து, பத்திரிகைகளுக்கு விநியோகித்தனர். சத்தீஸ்கரின் இந்தி பத்திரிகை இந்த புகைப்படங்களை பதிப்பித்தது.
பொட்டம் சம்பவம் தற்போது மூன்றாம் கட்டத்திலுள்ள பசுமை வேட்டை நடவடிக்கையின் (OGH) பகுதியாக மத்திய ரிசர்வ் காவல் படைகளும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா காவல் படைகளும் நடத்தி வரும் எண்ணிலடங்கா கொலைகள், வன்புணர்ச்சிகள் மற்றும் அழிவு நடவடிக்கைகளில் கூடுதலான ஒரு சம்பவமே.
2012 ஜூனில் சி 60 அதிரடிப்படையினர், கட்சிரோலி மாவட்டத்தின் இடபள்ளி தாலுகாவில் மெட்ரி கிராமத்தின் அருகே பெண்கள் கெரில்லாக்களை தாக்கினர். காயமடைந்த ஆறு பெண்கள் கெரில்லாக்களை பிடித்தனர், அவர்களை வன்புணர்ச்சி செய்து கொடூரமாக கொன்றனர். அதன்பின் இறந்த உடல்களுடன் அருவருப்பூட்டும் வகையில் நடந்து கொண்டனர்.
பொட்டம் சம்பவத்தில், இராணுவத்தினர் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்கள் எல்லா உரிமைகளையும் தங்கள் இரும்பு பூட்சுகளினால் நசுக்கியுள்ளனர் என்பதோடு அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரான அக்கிரமங்களை புரிந்துள்ளனர்.
அவர்கள் நாகரீக சமூகத்தின் ஒவ்வொரு நாகரீக ஒழுக்கத்தையும் காற்று வெளிகளில் தூக்கியெறிந்ததன் மூலம் தங்களின் வெட்கமின்மையைற்றதனத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
அவர்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நாகரீக சமூகத்தின் மதிப்பீடுகளை மீறியுள்ளதோடு காயமடைந்த வீரர்களும் கைதிகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் இன்னும் கூடுதலாய் பெண் கிளர்ச்சியாளர்கள் காயப்பட்ட நிலையில் இருக்கும் போது, அவர்கள் மிகவும் கவனமாக நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்ற யுத்த விதிகளையும் மீறியுள்ளார். இது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் மட்டுமல்ல மேலும் ஒரு போர் குற்றத்தின் நிறைவேற்றமும் கூட.
ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தப்படி இத்தகைய போர் குற்றத்திற்கு உள்ளாகும் நபர்கள் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது காவல் படைகளின் கொடூரமான குற்றவியல் பத்திரத்தை மட்டுமல்ல அவர்களின் மற்றும் குற்றவியல் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது.
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையும், இத்தகைய அரசாங்க படைகளின் கொடூரமான குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றி கேள்விகள் எழுப்பினாலும் கூட பெண் கெரில்லாக்களின் நிர்வாண படங்களை வெளியிட்டதன் மூலம் அது தன் சொந்த அற நெறிகளை மீறிவருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
தண்டகாரண்ய இயக்கத்தை ஒடுக்க மத்திய மாநில அரசாங்கங்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட சல்வா ஜூடுமின் போதும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் பச்சை வேட்டை நடவடிக்கையின்போதும் எண்ணற்ற அக்கிரமங்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன இன்னும் நடத்தப்பட்டுவருகின்றன. காவல்துறை குண்டர்கள் நாகரீக சமூகத்திற்கு சவால் விடும் வகையில் அவர்களின் மனிதத்தன்மையற்ற புகைப்படமெடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை வெளிட்டது அனைத்து எல்லைகளையும், மீறியுள்ளது. வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட கொடூரமானது
நாங்கள் மக்களிடமும் ஜனநாயகவாதிகளிடமும் குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இத்தகைய அருவருக்கத்தக்க குற்ற இயல்பையும் மனிதத்தன்மையற்றதுமான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்க கோருகிறோம்.
நாங்கள் போட்டேம் அக்கிரமங்களை புரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க கோரும் இயக்கங்களை கட்ட குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளை வேண்டுகிறோம்.
நாங்கள் இத்தகைய அருவருக்கத்தக்க மனிதத்தன்மையற்ற சட்டவிரோத மனித உரிமை மீறல்களை புறிந்து பின் காவல்துறையால் பிறகு வெளியிடப்பட்ட புகைப்படங்களை பதிப்பித்த சத்தீஸ்கர் இந்தி பத்திரிகையின் செயலை கண்டிக்க அனைத்து இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் கழகங்களை கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சிகர ஜனநாயக முன்னணி
Geen opmerkingen:
Een reactie posten