[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 12:37.36 PM GMT ]
பயங்கரவாத குற்றங்களுக்காக அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
அந்த பிடிவிறாந்தில், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் நடத்தாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இவர் தூனிதூ தீவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்ட போது, அவருடை வீட்டுக்கு முன்னாள் அவருடைய ஆதரவாளர்கள் குவிந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாருக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், மாலைத்தீவின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை மிகவும் ஆபத்தானது!– தேசிய சுதந்திர முன்னணி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 12:51.57 PM GMT ]
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஹூசைன் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவிருந்தார்.
தற்போது அறிக்கை சமர்பிக்கப்படுவது 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பிரிவினைவாதம் தலைதூக்குவதை தெளிவாகக் காண முடிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்த சீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களும், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டுள்ளன. மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் தாம் எண்ணியது போல் வடக்கில் மீன் வளத்தை கொள்ளையிட்டு வருகின்றனர். கடற்படையினர் அதற்கு எதிராக தற்போது செயற்படுவதில்லை.
வடக்கில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்ட பொறி வெடி என அதிகாரிகள் அதனை கூறுகின்றனர்.
தமிழ்நெட் இணையத்தளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் பேட்டி அடங்கிய புரொண்ட்லைன் சஞ்சிகை இலங்கையில் தடையின்றி எங்கும் விநியோகிக்கப்படுகிறது.
அரசசார்பற்ற நிறுவனங்கள் வடக்கில் தாம் விரும்பியவாறு செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் பகிரங்கமாக வடக்கில் அரசியலில் ஈடுபடுகிறது.
இதுதான் நல்லாட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள பிரிவினைவாதத்தின் மாற்றம் எனவும் மொஹமட் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns0D.html
Geen opmerkingen:
Een reactie posten