தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

மகிந்த குடும்பத்தினருடன் அவுஸ்திரேலிய பிரதமரின் நெருக்கம் அம்பலம்

இலங்கையின் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட்டிற்கு உள்ள நெருக்கம் குறித்து இலங்கை மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

த அவுஸ்ரேலியனுக்கு அளித்துள்ள விசேட பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதில் ராஜபக்சாக்களின் உதவியை பெறுவதற்காக அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனமாக இருப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூவமாக ஆட்களை கொண்டு செல்வது ராஜபக்சாக்களுடன் தொடர்புடையவர்களாலேயே மேற் கொள்ளப்பட்டது.இலங்கையின் பாதுகாப்பு படையினர் அல்லது பொலிஸாரின் ஓத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும், ராஜபக்ச அரசாங்கம் இதனை செய்யவில்லை. அவர்கள் அதன் மூலம் ஏதோ நலநன பெற முயன்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை அப்போதை குடிவரவுதுறை அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலமாக இராஜதந்திர நடைமுறைகளை பின்பற்ற தவறினார்,இதன் காரணமாக தற்போதைய குடிவரவுதுறை அமைச்சருக்கு உரிய மரியாதை அந்த கட்சியிடமிருந்து கிடைக்காமல் போகலாம்.
நூன் அவுஸ்திரேலியாவிற்கு எதிரானவன் அல்ல ஆனால் நீங்கள் அனுபவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும்,வேறு சில நாடுகளும் ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்கிய காலத்தில் மௌனமாக இருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்
http://www.jvpnews.com/srilanka/98395.html

Geen opmerkingen:

Een reactie posten