தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

கே.பியை விசாரிக்க போவதாக இலங்கை அரசு முதன்முதலாக அறிவிப்பு

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:03.29 AM GMT ]
இலங்கையின் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி இன்று நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. 
இவர் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையில் தற்போது எந்தவிதமான மரண பயமும் இல்லை என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மதியம் நாடு திரும்பிய அவர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே நான் நாடு திரும்ப தீர்மானித்தேன். மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது.
மரண பயமின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கடமையை செய்ய முடியாதிருந்தது. எனக்கு கொலை அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றேன்.
நாட்டில் சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதால், நாடு திரும்பி மீண்டும் பொலிஸ் இணைந்து பணியாற்ற எண்ணியுள்ளேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu7D.html

கொழும்பு துறைமுக நகரில் ஒரு பகுதி இந்தியாவுக்கும் வழங்கப்படுகிறது
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:09.32 AM GMT ]
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போது அரசியல் மேடைகளில் தலைப்பாக மாறிய கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான தலைப்பு தற்போது புஷ்வாணமாகியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்த துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் நாட்டுக்கு கேடு விளைவிக்க கூடியது என இவர்கள் அறிந்திருந்தனர்.
தமது ஆட்சியை முன்னெடுக்க சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புகளை பெறுவதற்காக நாட்டுக்கு கேடுவிளைவிக்கும் என்று அறிந்தும் அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தில் இலங்கைக்கு 62 ஹெக்டோயர் நிலமே இலங்கைக்கு உரித்துடையது. அதில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இந்திய விஜயத்தின் போது இணங்கியுள்ளார்.
கடலை நிரப்பி உருவாக்கப்படும் இந்த துறைமுக நகர் 233 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்டிருக்கும் அதில் 170 ஹெக்டேயர் நிலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் 63 ஹெக்டேயர் நிலம் பொது வசதிகளுக்காக அபிவிருத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 170 ஹெக்டேயர் நிலத்தில் 108 ஹெக்டேயர் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளது.
அதில் 20 ஹெக்டேயர் சீனாவுக்கு சொந்தமாக வழங்கப்பட உள்ளதுடன் 88 ஹெக்டேயர் 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட உள்ளது.
இதில் மிதமுள்ள 63 ஹெக்டேயர் நிலம் இலங்கைக்கு உரிமையானது என்பதுடன் அதில் ஒரு பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:12.32 AM GMT ]
மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக 34 மாகாணசபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணத்தில் கையொப்பமிட்டு மத்திய மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக அறிய முடிகின்றது.
58 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய மாகாணசபையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக 16 உறுப்பினர்களும் முன்னைய ஆளுங்கட்சி சார்பாக 42 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த 42 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களுமாக 34 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த திலின பண்டார தென்னக்கோனை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரி சத்திய பிரமாண கடிதமொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தன்னை தொடர்ந்து முதலமைச்சராக தொடர்வதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மத்திய மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் , சித்ராமன்திலக்க ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் 18 உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 உறுப்பினர்களாகியது.
அதே போல ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , எம்.உதயகுமார் ,திருமதி .சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம், ஆர்.ஜீ. சமரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மத்திய மாகாணசபையின் ஜனவரி மாதத்தில் இரண்டு மாகாணசபை அமர்வுகள் இடம் பெற்ற போதும் ஆட்சி மாற்றத்துக்குரிய எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
மேலும் மத்திய மாகாணசபையின் ஆளுநராக செயற்பட்டு வந்த டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய ஆளுநரா சுராங்கனி எல்லாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பெப்ரவரி மாதத்தில் சபை அமர்வுகள் இடம்பெற வேண்டிய நாட்கள் விடுமுறைகள் என்பதால் சபை அமர்வுகள் இடம்பெறவில்லை. அடுத்த சபை அமர்வு மார்ச்சு மாதம் 3 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
இந்தச்சபை அமர்வின் போது மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பது தொடர்பில் பலரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu7F.html

தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:17.49 AM GMT ]
தேசிய ஔடத சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உடனே நிறைவேற்றப்படும் என சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலிருந்த நாம் கடந்த கால அரசாங்கத்திலிருந்து வெளியேற சிறுநீரக நோய் தொடர்பான பிரச்சினையே மூலகாரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சிறுநீரக நோய் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் மஹிந்த அரசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.
மேலும் சிறுநீரக நோய்க்கு மூலகாரணமாக கருதப்படும் தரமற்ற இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் முறையிட்டபோது அவர் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில் மார்ச் மாதம் 4ம் திகதி தேசிய ஔடத சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உடனடியாக அதனை நிறைவேற்றுவோம் என சுகாதார அமைச்சர் உறுதி கூறியுள்ளார்.

பந்து விக்ரமவுக்கு அழைப்பாணை குற்றப்புலனாய்வு பிரிவு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:32.45 AM GMT ]
இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பந்து விக்ரமவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பாணை இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும், இராணுவ தளபதிக்கும் இடையில் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:51.23 AM GMT ]
இராணுவத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுடன் சந்திப்பில் ஈடுப்பட்டுள்ளார்.
புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எதிர்காலத் திட்டங்கள் கடமைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பின் நிறைவில் இராணுவத் தளபதி பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்க திட்டம்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:59.37 AM GMT ]
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் செய்யப்பட்ட தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கென விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை அறுபது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரச சொத்துக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியமை ஊடகங்களின் பயன்பாடு குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

கே.பியை விசாரிக்க போவதாக இலங்கை அரசு முதன்முதலாக அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:36.18 AM GMT ] [ பி.பி.சி ]
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருப்பதாக இலங்கை அரசு முதன்முறையாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. 
குமரன் பத்மநாதனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது இலங்கை அரசின் வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்தார்.
இந்த வழக்கின் மனுவில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இன்றைய வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறுகள் இலங்கைக்குள் மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்திருப்பதாக தெரிவித்த இலங்கை அரசதரப்பு வழக்கறிஞர், இவை குறித்து விசாரணை செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறுமாத கால அவகாசம் அளிக்கும்படி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 தேதி வரை ஒத்திவைக்க தீர்மானித்தது. அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறு நீதிபதி அரச தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
குமரன் பத்மநாதன் சர்வதேசரீதியில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பல குற்றங்களை புரிந்துள்ளதாக கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறிப்பிட்டு வந்தபோதிலும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
எனவே குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி:

http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyD.html

Geen opmerkingen:

Een reactie posten