[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 01:58.44 AM GMT ]
பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென கோரியே இந்த பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள கையெழுத்து திரட்டும் ஆரம்ப நிகழ்விற்கு பௌத்த பிக்குகள் மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்படும்: உதய கம்மன்பில
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி்ன் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிறுத்த வலியுறுத்தி, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மகஜர் ஒன்றில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க தீர்மானித்துள்ளார்.
கையெழுத்துக்களை பெற்று இந்த மகஜரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிடம் கையளிக்க உள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தாலும் இலங்கை மக்கள் இன்னும் அவரை நேசிக்கின்றனர் என்பதை நாம் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளோம்.
நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் 5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் அசாத் சாலி 5 ஆயிரம் மக்கள் மாத்திரமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்ததுடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன 212 பஸ்களில் மக்கள் அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனநிலைமையை அறிந்து கொள்ளவதில் அக்கறை செலுத்துவதை காணமுடியாதிருப்பதால், மக்களின் கையெழுத்துக்களை பெற்று எழுத்து மூலமான சாட்சியாக இந்த மகஜரில் கையெழுத்து பெற தீர்மானித்துள்ளோம். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்படாத நிலையில், பிற கட்சிகளை சேர்ந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இந்த கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ள இவர்கள் மகிந்தவை பயன்படுத்தி அரசியல் கரைசேர முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu4F.html
மாலைதீவின் நிலைமைகள் குறித்து இலங்கை கவனம்!
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:08.57 AM GMT ]
நட்பு நாடு என்ற ரீதியில் மாலைதீவின் தற்போதைய சூழ்நிலை குறித்து அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலைதீவில் முரண்பாடுகளை எதிர்நோக்கி வரும் தரப்பினர் சகல முரண்பாடுகளையும் கலைந்து அமைதியான முறையில் சுமூகமாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை பிரச்சினைகள் சுமூகமான முறையில் அணுகப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
பௌத்த பிக்கு ஒருவர் பணிப்பாளராக கடமையாற்றுவதில் என்ன தவறு?: நிதி அமைச்சர்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:12.16 AM GMT ]
லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கமான தீனியாவெல பாலித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவரை பணிப்பாளர் சபையில் உள்வாங்கப்பட்டமைக்கு சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் பௌத்த பிக்கு ஒருவர் பணிப்பாளராக கடமையாற்றுவதில் எவ்வித பிழையும் கிடையாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக முதல் தடவையாக பௌத்த பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஓர் சாதனையாகவே கருதப்பட வேண்டும்ää இந்த அரசாங்கம் சாதனைகளைச் செய்யும் அரசாங்கமாகும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீனியாவல பாலித தேரர் மஹாபோதி அமைப்பின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கடமையாற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும்: மயாதுன்னே
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:24.45 AM GMT ]
ஆவணங்கள் காணாமல் போயுள்ளதனால் கடந்த அரசாங்கத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இவ்வாறு ஆவணங்களை காணவில்லை என தண்டனை விதிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கக் கூடிய சாத்தியம் கிடையாது.
ஆவணங்களின் பிரதிகளை தேடிப்பிடித்து விசாரணைகளை ஆரம்பிக்க ஓர் பொறிமுறைமையை துரித கதியில் ஆரம்பிக்க வேண்டுமென மாயதுன்னே கோரியுள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்று ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பிலான பல ஆவணங்கள் தற்போது காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சிலிருந்த 2200 ஆவணங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலைமையை உணராமல் எமது தலைவரின் கொடும்பாவி எரிக்கப்படுவது மனவேதனையை தருகின்றது: யோகேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 03:41.41 AM GMT ]
எங்களுக்காகவும் எமது மக்களுக்காகவும் நீண்டகாலமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் உறவுகள் நாட்டின் தற்போதைய நிலைமையையும், தமிழர்களின் நிலைமையையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராது எமது தலைவரின் கொடும்பாவியை எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிக்கின்ற செயலை செய்வதையிட்டு மிகுந்த வேதனையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலையில் நீர் பாவை சிலை திறப்பு விழாவும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியும் சிறப்பாக நேற்று பிற்பகல் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி மாலதி பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். தமிழர்களின் கலை கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாவை சிலை இங்கு அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டு, மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu4J.html
Geen opmerkingen:
Een reactie posten