விஜய் TV நடாத்திவரும் சூப்பர் சிங்கள் நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற மாபெரும் நிகழ்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இன் நிகழ்சியில் இந்தியர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். ஆனால் தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் சிறுவர்களும் இன் நிகழ்சியில் பங்கெடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்சி கடந்த வெள்ளியன்று முடிவுக்கு வந்தது. அதன் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கும் மாபெரும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈழத் தமிழ் சிறுமியான ஜெசீகா மிகவும் அற்புதமாக பாடினார். கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்டா ஈழத்து சிறுமியின் "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா " என்ற பாடல் அனைவர் கண்களையும் ஈரத்தால் நனைத்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஒரு கணம் அழுதுவிட்டார்கள் என்றால் அது மிகையாகாது. இன் நிகழ்சியை பெருந்தொகையான மக்கள் நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருந்தவேளை, மேலும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் TV இல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஜெசீகா பாடிய இந்தப் பாடல் ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்த சோகத்தை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. விஜய் TV இன் சூப்பர் சிங்கர் 2வது இடத்தை ஜெசீகா பிடித்தார். இவருக்கு 1கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி சுமார் 26 லட்சம் இந்திய ரூபா ஆகும். அதனை அப்படியே அவர் ஈழத் தமிழ் அகதிகளுக்கு கொடுத்துவிட்டார் என்பதே மேலும் சிறப்பான நிகழ்வாக இருந்தது.
பொறாமையில் சிக்கி தவிக்கும் சிலர் , ஜெசீகா ஈழத்து பாடலை பாடி உணர்வை விற்று வாக்குகளை பெற்றுவிட்டார் என்று கூறிவருகிறார்கள். இவர்களை போன்ற அடி முட்டாள்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். சரியான மேடையில் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்வில் அவர் , சரியான பாடலை பாடியுள்ளார். வெளிநாட்டில் பிறந்தாலும் தான் ஒரு ஈழத்துச் சிறுமி என்பதனை உலகிற்கு உணர்த்தியுள்ளார் ஜெசீகா. அவரை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் ? அவருக்கு உள்ள உணர்வு கூட சில தமிழர்களுக்கு இல்லை என்பது தான் வருந்த தக்க விடையமாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2364.html
Geen opmerkingen:
Een reactie posten