தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

வட, கிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:04.25 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியுடன் மூடிவிட அதன் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் இழப்பீட்டு தொகையுடன் நிறுவனத்தில் இருந்து விலகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய சில அதிகாரிகளுக்கு கடந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் பல குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.


நோர்வே மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:55.41 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் அமர்விலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்கூட்டியே இந்த தகவலை ஈழத்தமிழர் அவையால் வழங்கப்பட்டு, எதற்காக இந்தக் கவனயீர்புப் போரட்டம் செய்யப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையினை கட்டாயமாக மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே சமர்ப்பிக்கப்பட நோர்வே அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டி நிற்கிறோம் என வலியுறுத்தி மின் அஞ்சல் முலம் மகஜர் கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சகம் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதாக ஈழத்தமிழர் அவை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையிலும் பல இளைஞர்களும் ஈழ உணர்வாளர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்கள். 
மக்களவை வலியுறுத்திய விடயங்கள்:
1) ஐ.நா சபை இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைக்காமல் மார்ச் மாத கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்.
2) ஐ.நா நிபுணர்குழுவை உடனடியாக இலங்கைக்குள் விசாரணைக்காக இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
3) இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
4) நீதியான சர்வதேச விசாரணையை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
5) நோர்வேக்கு ஒரு தார்மீகப்பொறுப்பு உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு போர்க்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்றம், அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தமிழின அழிப்புக்கு நீதிகோரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று தாயகத்திலும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலும் நடாத்தப்பட்டது.
பிரான்சு பாராளுமன்றத்துக்கருகில் மாலை 3.30 மணிக்கு நம்பிக்கையோடும், இனமான உணர்வு கொண்ட பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு சம்பந்தமான துண்டுப் பிரசுரங்கள் பிரெஞ்சு வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக சத்தியதாசன் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியிருந்தார். மாலை 5.30 மணிக்கு இவ்ஒன்றுகூடல் நிறைவு பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu2C.html
தேசிய அரசாங்கம் என்பது ஐ.தே.கட்சியின் அரசியல் சதி: வாசுதேவ நாணயக்கார
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 01:02.03 PM GMT ]
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை விமர்சித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுவிழக்க செய்ய ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேற்கொள்ளும் அரசியல் சதி எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீண்டகாலம் பதவியில் இருக்க முயற்சிக்கின்றார்.
தற்போதைய அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லை என்பதால், மக்கள் நட்பு அரசாங்கம் என்ற போர்வையில் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள முயற்சித்து வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்திய செயலமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலோபாயவாதி சிரால் லக்திலக்க உரையாற்றினார். இது அபத்தமானது.
தற்போதைய அரச நிர்வாகம் சட்டத்தின் ஆட்சியை பிடித்து அடக்கி வருகிறது எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வலியுறுத்துவதன் மூலம் தாம் உள்ளிட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை அந்த கட்சி விரைவில் தீர்த்து கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கான அத்திவாரத்தை போட முயற்சித்து வருகின்றோம் எனவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையும் என்பது பகல்கனவு!- மாவை சேனாதிராஜா
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 01:14.40 PM GMT ]
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையும் என்பது பகல் கனவு என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஆட்சியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் அது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்தில் இணைவது மட்டுமல்ல புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் எம்மை வந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்கள். ஆனால் அதனை நாங்கள் நிராகரித்திருக்கின்றோம்.
குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் பெறுவது தொடர்பில் நாங்கள் அப்போது சிந்திக்கலாம்.
ஆனால் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை உருவாக்க உழைத்த கட்சிகள் இணைந்து தேசிய சபை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள். அந்தச் சபை அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு போன்றன குறித்து ஆராய்ந்து வருகின்றது.
இந் நிலையில் குறித்த தேசிய சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் அங்கத்துவம் பெறுகின்றார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து பேசி தீர்மானிப்போம் என்றார். 

http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu2E.html

வட, கிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:33.19 PM GMT ]
வடக்கு கிழக்கில் வாழும் மீனவர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாக இன்னும் அகதி முகாம்களிலேயே வசித்து வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பாளர் அன்டன் ஜேசுதாசன், முன்னைய அரசாங்கம் ஜெனிவாவுக்கு சென்று இலங்கையில் எந்த பிரஜைகளும் அகதி முகமில் இல்லை என கூறியது.
எனினும் வடக்கு, கிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். இந்த மாகாணங்களை சேர்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்தனர்.
போர் நடைபெற்ற காலத்தில் வவுனியாவில் இருந்த அகதி முகாம்களை பற்றியே அனைவரும் பேசினர். அவர்களை மீள்குடியேற்றியதும் மீள்குடியேற்றம் முடிந்து விட்டது என முன்னைய அரசாங்கம் கூறியது.
எனினும் இந்த பிரதேசங்களில் எமது மக்கள் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இவர்களை துரிதமாக மீள்குடியேற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்டன் ஜேசுதாசன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu2B.html

Geen opmerkingen:

Een reactie posten