தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

மகிந்தவை இராவணனுடன் ஒப்பிடும் விமல் வீரவன்ஸ!

துறைமுக நகர திட்டத்தை பிரதமர் நிறுத்துமாறு சொன்னாரா என்று தெரியவில்லை: ராஜித
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 08:48.16 AM GMT ]
சீனாவினால் கொழும்பு காலி கடற்கரையில் மேற்கொள்ளப்படுகின்ற துறைமுக நகர திட்டத்தை நிறுத்துமாறு தான் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் தான் அத்திட்டத்தை ஆரம்பித்தோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த திட்டத்தை நிறுத்துமாறு கூறினாரா என்று தெரியவில்லை, ஆனால் நாங்கள் நிறுத்துமாறு கூறவில்லை.
குறித்த துறைமுக நகரதிட்டத்தில் சூழலை பாதிக்கும் பிரச்சனை இல்லை, அப்படியான பிரச்சனை இருந்தால் சீனா குறித்த திட்டத்தை ஆரம்பித்திருக்கமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முச்சக்கர வண்டி பஸ் வண்டியுடன் மோதி விபத்து: 4 போ் படுகாயம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 09:02.37 AM GMT ]
ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று  ஹற்றனிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்  படுகாயமடைந்த 4 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முச்சக்கரவண்டியில் சென்றவா்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நோர்வூட் பொலிசார் தெரிவிக்கின்றனா்.
முச்சக்கரவண்டியில் சென்றவா்கள் சிவனொளிபாதமலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனா்.


http://www.tamilwin.com/show-RUmtyCSYKdft7.html

அமைச்சரவை பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஹெல உருமய அழைப்பு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 09:34.46 AM GMT ]
அமைச்சரவை பதவிகளை பெற்றக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஹெல உருமய அழைப்பு விடுத்துள்ளது.
ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தன் இவ் அரசாங்கத்தின் நிர்வாக குழுவில் உள்ளதனால் அமைச்சரவையில் பதவிகள் பலவற்றினை பெற்றுக்கொண்டு வடக்கு மக்களுக்கு சேவைகளை செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களுக்கு இடம் பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் முன்வைத்த யோசனையை அவமானமாக கருதுவதாக வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfuz.html

மகிந்தவை இராவணனுடன் ஒப்பிடும் விமல் வீரவன்ஸ
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 09:57.08 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தல் இராமன் மற்றும் இராவணனுக்கு இடையிலான போரை போன்றது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இராவணன் எப்படியான பலமிக்கவராக இருந்தாலும் இராமனால், இராவணனை தோற்கடிக்க முடிந்தது.
இராவணனின் அணியில் இருந்து சில காட்டிகொடுப்புகள் காரணமாகவே இராவணன் தோல்வியடைந்ததாக இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக விபிஷணன் போன்றவர்கள் இதற்கு காரணமாக இருந்தனர்.
இல்லாவிட்டால் இதனை 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று நிகழ்வாக இதனை கருத முடியும். கண்டி மேல் நாட்டு மேட்டுக்குடியினர், ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்ற, நாட்டின் கடைசி மன்னரை காட்டிக்கொடுத்தனர் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfu0.html

Geen opmerkingen:

Een reactie posten