மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 08:27.22 AM GMT ]
இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது தேர்தலில் போட்டியிடவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எண்ணியுள்ளது.
விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்ற கடும் ராஜபக்ச ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதையும் அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலைமையில், வீரவன்ஸ மற்றும் கம்மன்பில போன்றவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்திற்குரியது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டால், கிடைக்கக் கூடிய வாக்குகளும் கிடைக்காமல் போகலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கணித்துள்ளனர்.
விமல் வீரவன்ஸ மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஊடாக செல்வந்தர்களான பிரதேச அரசியல்வாதிகளுக்கே மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் தேவை இருப்பதாகவும் அந்த முயற்சிகளை தோற்கடித்து புதிய தலைவர்களின் தலைமையில் போட்டியிட வேண்டும் என்பதே சிரேஷ்ட தலைவர்களின் நிலைப்பாடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv4J.html
கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டங்களை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம்! வர்த்தகர் சங்கம் தூக்கம்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 08:34.08 AM GMT ]
தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சகோதர இனங்களை சேர்ந்த வியாபாரிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் நிரந்தரமாக காலம்காலமாக வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் கடும்பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
கிளிநொச்சி நகரம் மற்றும் சந்தை உட்பட்ட பகுதிகளின் கட்டுப்பாடு கரைச்சி பிரதேச சபைக்கு அதிகார எல்லைக்கு உட்பட்டே காணப்படுகின்றது.
இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப்போக்கு, கிளிநொச்சி வர்த்தகர் சங்க நிர்வாகங்களின் அசமந்தபோக்கு காரணமாக, கிளிநொச்சியில் நீதியற்ற ஒரு வியாபார நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.
சந்தைப் பகுதியில் பலகடைகள் உரிமையாளர்களால் வேறு நபர்களுக்கு குத்தகைக்கோ, வாடகைக்கோ வழங்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு மூன்று நான்கு கடைகள் இருப்பதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளன.இதேபோல சந்தைக்கு வெளியே உள்ள கடைகளும் இங்குள்ள காணி உரிமையாளர்களால் மற்றும் கடை உரிமையாளர்களால் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகளுக்கோ அல்லது முஸ்லிம் வியாபாரிகளுக்கோ வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய கடையை நடத்துகின்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறந்து நடத்துவதுடன் இரவு பத்து பதினொரு மணிவரை கடைகளை திறந்து வைத்துள்ளனர்.
இந்தக்கடைகளில் கிளிநொச்சியை சேர்ந்த கஸ்டப்பட்ட இளம் பெண் பிள்ளைகளே பணி செய்கின்றனர். ஏனைய கடைகள் திறக்கப்படாமல் வேறு மாவட்டத்தில் இருந்துவரும் வியாபாரிகள் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறக்கின்றபோது கலாச்சார சீரழிகளும் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
எனவே கரைச்சி பிரதேச சபை மற்றும் வரத்தகம் சங்கம் என்பன அசமந்தப்போக்குகளை தவிர்த்து கிளிநொச்சி வியாபாரிகளின் வருமானங்களை பாதுகாத்து கலாச்சார சீரழிவுகளையும் தவிர்த்த வியாபார சட்ட நடைமுறைகளை பேண வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணின் பொருளாதார வறுமையை பயன்படுத்தி வேறு மாவட்டத்தில் இருந்துவரும் பணமுதலைகளும் கலாச்சார பிறழ்வு உள்ளவர்களும் கிளிநொச்சி மண்ணை சீரழிப்பதற்கும் சுரண்டுவதற்கும் சம்மந்தப்பட்ட அதிகார தரப்புக்கள் இடமளிக்க கூடாது என பாதிக்கப்படும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திர கட்சி வெற்றி பெறும் என்பதை ஜனாதிபதி பகிரங்கமாக கூற வேண்டும்!– விதுர விக்ரமநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 08:54.52 AM GMT ]
ஹொரனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவ்வாறான ஓர் எதிர்பார்ப்புடனே நியமிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறும் என்பதனை அறைகளில் சொல்லாமல் பகிரங்கமாக சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நடுநிலைமையாக உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உதவி செய்யமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஜனாதிபதி அறைகளில் இருந்து கூறும் விடயங்களை பகிரங்கமாக நான் ஸ்ரீலங்கா சதந்திர கட்சியை வெற்றிபெற செய்து தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வேன் என கூறவேண்டும்.
அவ்வாறு அறிவிப்பதற்கு முயற்சிக்காவிட்டால் அதற்கு எதிராக கட்சி என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5C.html
சாவகச்சேரியில் பாரியளவில் வெடிபொருட்கள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 08:57.37 AM GMT ]
நிலத்திற்கு கீழ் ஐந்து பொதிகளில் பாரியளவில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
148 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்தக் காணிக்கு அருகாமையில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிப்புச் சத்தமொன்று கேட்டதாக குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5D.html
Geen opmerkingen:
Een reactie posten