தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

இலங்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்



மட்டு.கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்துக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 03:40.44 AM GMT ]
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவற்றினை இடைநிறுத்துமாறு கோரியும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 7.00 மணியளவில் ஒன்று திரண்ட பெற்றோர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அதிபரை இடமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஆகியோர் ஆர்ப்பாட்டங்காரர்களுடன் கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் கையொப்பமிட்டு இந்த இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் விசாரணை மேற்கொள்வதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அதிபரின் இடமாற்றம் நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
ஒருவர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்ய முடியாது. குற்றவாளியென இனங்காணப்பட்டால் மாத்திரமே நடவடிக்கையெடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கையினை அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரிம் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த அதிபரின் திட்டமிடலில் சிறப்புறும் எம் பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர உதவுங்கள், சீரான கல்வி முன்னெடுப்பினை குழப்ப வேண்டாம், அதிபர் இன்றி ஐந்தாம் தர பரீட்சை விண்ணப்பத்தில் பெற்றோர் எவ்வாறு கையொப்பம் இடுவது போன்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையுறு ஏற்படாதவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns2J.html

கிழக்கு மாகாணசபையில் அம்பாறைத் தமிழர் ஒருவருக்கு அமைச்சு பதவி வழங்கவேண்டும்: த.தே.கூட்டமைப்பிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 04:15.57 AM GMT ]
கிழக்கு மாகாணசபையில் ஒரு சில தினங்களில் ஆட்சி அதிகாரம் அமைக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் அமைச்சு பொறுப்புகளில் ஒன்றை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதியாக அம்பாறை மாவட்டம் இருக்கின்ற நிலையில் தமிழர்கள் எதுவித ஆதரவும் அற்ற நிலையிலேயே இருந்துவருகின்றனர்.
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று சிறுபான்மை சமூகமாக மாறியுள்ளனர். இதற்கு தமிழ் மக்களின் அரசியல் பலம் இன்மையும் காரணமாகும்.
கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் நன்மை கருதிச்செயற்படவில்லை. அதற்கு சான்றாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று அரசாங்கத்திடம் தனது வயிற்றை வளர்ப்பதற்காக சென்று தமிழ் இனத்தினை குழிதோண்டிப்புதைத்துவிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் சமூகம் அரசியல் பலம் இன்றி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்ததுடன் மாறிமாறி வந்த அரசாங்கங்களில் இருந்துவந்த முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். ஆதரவற்றிருந்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த கிழக்கு மாகாணசபை மற்றும் பிரதேசசபை மூலம் ஓரளவு பலம்பெற்றுள்ளனர்.
எனினும் இந்த பலத்தினால் எதனையும் செய்யமுடியாத நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணசபையிலும் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வெளிவரும் தகவலின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சு பதவிகளும் ஒரு பிரதி தவிசாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அதில் பிரதி தவிசாளர் மூலம் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய பகுதிகளுக்கு எந்தவித சேவையினையும் ஆற்றமுடியாது. எனவே இரு அமைச்சு பதவியில் ஒரு அமைச்சு பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள புத்திஜீவிகள், எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த தேவையான மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns3B.html


இலங்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 12:41.28 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (பிப்ரவரி 23) தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
அதிமுக: இக்கூட்டத்தில் அதிமுக சார்பில், திருவள்ளுர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர்.
அப்போது அதிமுக சார்பில், "முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காக்கவும், இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.
திமுக:
திமுக சார்பில் பங்கேற்ற அதன் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், "இக்கூட்டத்தொடரில் ஆறு அவசரச் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் விவசாயிகளின் கருத்தை அறியாமல் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது.
மற்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் திமுகவுக்கு ஆட்சேபம் இல்லை. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழியைத் திணிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
எனவே, மத்திய மொழிக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். மேலும், பொது விநியோக திட்டம், சுயஉதவிக் குழுக்கள் போன்ற விவகாரங்களில் மாநில, மத்திய அரசுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதுகுறித்தும் நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும்' என்று என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்றார்.
மார்க்சிஸ்ட்:
இலங்கைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அங்கு நிலவும் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய அழுத்தத்தை மத்திய அரசு தர வேண்டும்.
இச்சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்க வேண்டும். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns2D.html

Geen opmerkingen:

Een reactie posten