தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

கவனயீர்ப்பு பேரணியில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை!

ஜனாதிபதி மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்: மரிக்கார் மா.உ
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 03:42.17 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர் என மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். 
பொருட்களின் விலைகளை குறைத்து மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்காமை, கையூட்டல் மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை, குற்றவாளிகளைத் தண்டிக்காமை, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பலவந்தப்படுத்தல்கள், கொலைகள் போன்றன தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் காணப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிள்ளைகளை தூக்கி கொஞ்சாத போதிலும் பால் மாவின் விலையை 60 ரூபாவினால் குறைத்தார். பிள்ளைகள் பால் குடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் முதுகைத் தட்டி பொய்யாக சிரிக்கா விட்டாலும் எரிவாயு விலையை 300 ரூபாவினால் குறைத்தார்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணையின் விலைகளை குறைத்தார்.
மக்ளுக்கு வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் மேலும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns7H.html


கவனயீர்ப்பு பேரணியில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை!
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:22.43 PM GMT ]
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை காலந் தாழ்த்தி சமர்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி முன்னெடுக்கப்பட்டது
குறித்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வட மாகாண சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சபையில் உறுப்பினர் ரவிகரன் குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணை ஒன்றினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தி வெளியிடப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும், அதனை காலம் தாழ்த்தாது மார்ச் மாதமே வெளியிட வேண்டும் எனக் கோரியுமே இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
எனினும் குறித்த பேரணியில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் மீண்டும் வட மாகாண சபை கூடியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt3F.html

Geen opmerkingen:

Een reactie posten