தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

தற்கொலை செய்து கொண்டால்தான் தப்பலாம் – சம்பந்தன்,யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் U.N அலுவலகம் முற்றுக்கை!

இலங்கை கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு தடை

இது தொடர்பிலான ஆலோசனைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன என மீனவ மற்றும் நீர்வள அபிவிருந்தி இராஜங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
அதேபோல, படகுகளின் கட்டுப்பாட்டை கண்காணிப்பதற்காக படகுகளில் ரி.எம்.எஸ் உபகரணங்களையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹொரணை பாடசாலையில் மோதல்! 7 பேர் வைத்தியசாலையில்

மோதலில் காயமடைந்த 7 மாணவர்கள், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாணவர்களுக்கிடையிலான குழு மோதலை தடுக்க சென்ற ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைக்கெடுபிடிகள் மத்தியில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் போராட்டம்!

2012ம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன பேரணி இரும்புக்கரங்கொண்டு அடக்கப்பட்டிருந்த நிலையினில் இன்றைய போராட்டம் அனைத்து தரப்புக்களது கவனத்தையும் இணைத்துள்ளது.
ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐ.நா அறிக்கையை வெளியிடக் கோரி பேரணியொன்றை நடாத்துவதற்கு இன்று திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து காலை இருவர் இருவராக பேரணியாக சென்று பரமேஸ்வரா சந்தியின் ஊடாக பலாலி வீதியூடாக கந்தர்மடம் சந்தியால் நல்லூர் வடக்கு வீதியை அடைந்து மகஜர் கையளிக்கப்படவுள்ளது. இந்தப் பேரணியானது வடக்கு அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன் பேரணியை மிகவும் அமைதியான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பேரணியாக அமைகின்றது. நாங்கள் ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளோம் என்பதைக் காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் எமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் இப்பேரணி ஏற்’பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே குடையின் கீழ் ஈழத்தமிழர்களாக கலந்து கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Jaffna US 1Jaffna US 2Jaffna US

யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் U.N அலுவலகம் முற்றுக்கை!

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பின்தள்ளப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை , 28வது மார்ச் மாத கூட்டத் தொடரிலே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் ஆட்சிமாற்றம் காரணமாக போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை மேலும் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முடி­வெ­டுத்­துள்­ளதாகக் கூறப்­ப­டு­கின்­றது. தாமதிக்கப்பட்ட நீதி தொடரும் குற்றச்செயல்களை ஊக்குவிக்கும். மேலும் இது அநீதிக்கு சமமாகவே கருதப்படும்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படுவது வரவேற்கக்கூடியது. இம்முயற்சி மக்களின் சுதந்திர தமிழீழத் தாகத்தையே வெளிப்படுத்துகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், காலம் தவறாமல் மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அனைத்து தமிழ் மாணவர்கள் , இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னையில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு நாம் ஒன்று கூடியுள்ளோம்.
மேலும், நாம் வலியுறுத்துவது:
1) இலங்கை அரசினால் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இனஅழிப்பை ஐ.நா சபை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
2) ஐ.நா சபை காலத் தாமதமின்றி இனப்படுகொலை தொடர்பாக நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வருகின்ற மார்ச் மாத கூட்டத்தொடரிலேயே வெளியிடப்பட வேண்டும்.
3) தமிழீழ மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, சுதந்திர தமிழீழம் அமைய பொது வாக்குக்கெடுப்பை விரைவில் நடத்த ஐ.நா முன்வரவேண்டும்.
4) தமிழீழ மrக்களின் நல்வாழ்விற்காகவும் விடுதலைக்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழீழ மக்களின் தேசிய ராணுவமாக அங்கீகரிக்க வேண்டும்.Tamil Nadu 1Tamil Nadu 2Tamil Nadu 3Tamil Nadu 4Tamil Nadu 5Tamil Nadu 6Tamil Nadu 7Tamil Nadu
நன்றி ,
தமிழ் மாணவர்கள், இளைஞர்கள்,தொழிலாளர்கள் மற்றும் உணர்வாளர்கள்
http://www.jvpnews.com/srilanka/98528.html

தற்கொலை செய்து கொண்டால்தான் தப்பலாம் – சம்பந்தன்

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ளமையானது, யுத்தக்குற்றவாளிகளைத் தப்பிக்க இடமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்த வெளியிட்டிருந்த சம்பந்தன், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அது குறித்த கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/98541.html

Geen opmerkingen:

Een reactie posten