தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 februari 2015

புலிகள் ஓர் கட்டுப்பாடான இயக்கம்! பிரபாகரன் மடியும்வரை, என்னைப்பற்றி பேசவில்லை கருணா !

லசந்த, தாஜுதீன் கொலைகள், பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விசாரணைகள் சிஐடியிடம்.....
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னெலிகொட காணாமற்போனமை மற்றும் ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் ரத்துபஸ்வல படுகொலைகள் தொடர்பான விசாரணைகளையும் புதிதாக ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னெலிகொட காணாமற்போனமை மற்றும் ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் ரத்துபஸ்வல படுகொலைகள் தொடர்பான விசாரணைகளையும் புதிதாக ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, படுகொலை மற்றும் காணாமற்போனதாக கூறப்படும் பிரதீப் எத்னெலிகொட ரத்துபஸ்வல படு கொலைகள், ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸ் மா அதிபரிடம் கேட்டபோதே இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடாக மேற்படி தகவல்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் வசீம் தாஜுதீன் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். நாரஹேன்பிட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. இரண்டு சாட்சியங்கள் பதிவாகியிருந்தன. அந்த இடத்தில் மரண விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் இரசாயன பகுப்பாய் வாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனால் அன்று முதல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது.

எனினும் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்திருக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தின் பின்னர் 2015.02.12 ஆம் திகதியே இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்துள்ளது. எனினும் அந்த அறிக்கையிலும் மரணத் துக்கான காரணத்தை கண்டறியக்கூடிய எந்த சாதகமான விடயங்களும் இல்லை.

எனினும் மரண விசாரணை அறிக்கை யின்படி இவரது உடலில் காபன் மொனோக்சைட் கலந்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இரகசியப் பொலிஸாரினால் விசார ணைகள் புதிதாக ஆரம்பிக்கப்படும். இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றே பதிவாகியுள்ளது.

இதேபோன்று பிரதீப் எத்னெலிகொட தொடர்பான விசாரணைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக 2010.01.24 ஆம் திகதி மாலை இவர் காணாமற் போயுள்ளதாக ஹோமாகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 48 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்ப ட்டுள்ளன.

இரண்டு சிம்கார்ட்டுகள் தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. போலியான பெயர் வழங்கப்பட்டே சிம்கார்ட் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையையும் புதிதாக ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படுகிறது. 2009.01.08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து லசந்த படுகொலை செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

பொலிஸார் விஞ்ஞான ஆய்வு ரீதியான விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் இரண்டு பேர் கைதானதுடன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தினுள் மரணமானார். அடுத்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் கல்கிஸ்ஸ நீதிமன்றம் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டிருந் தமைக்கு அமைய நேற்று முன்தினம் இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது.

மேலும் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. 2013.01.01 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விசாரணைகள் அனைத்தும் மிக குறுகிய காலத்துள் முடிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
27 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1425051758&archive=&start_from=&ucat=1&
ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவு!
கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், 2008 ல் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது, கண்காட்சிகூடம் இடிந்து வீழ்ந்து சமிதா சமன்மலி என்ற அப்போதைய வைத்தியபீட மாணவி ஊனமுற்றார்.

குறித்த மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிஎம்ஐசிஎச் நிர்வாகம், மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், 2008 ல் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது, கண்காட்சிகூடம் இடிந்து வீழ்ந்து சமிதா சமன்மலி என்ற அப்போதைய வைத்தியபீட மாணவி ஊனமுற்றார். குறித்த மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிஎம்ஐசிஎச் நிர்வாகம், மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
27 Feb 2015

ஜனாதிபதி மைத்திரி மகளும் களத்தில்.... (படம் இணைப்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் பொது தேர்தல் மூலம் அரசியலுக்குள் பிரவேசிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவரின் மகள் செயற்பாட்டு ரீதியான அரசியலை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தனது பிள்ளைகள் எவரையும் அரசியலுக்கு கொண்டு வரப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது மகள் அரசியலில் ஈடுபட போவதான இந்த செய்தி வெளியாகியுள்ளது.
28 Feb 2015

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1425117642&archive=&start_from=&ucat=1&
புலிகள் ஓர் கட்டுப்பாடான இயக்கம்! பிரபாகரன் மடியும்வரை, என்னைப்பற்றி பேசவில்லை கருணா (வீடியோ இணைப்பு)








28 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1425122293&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten