யாழ் ஊர்காவற்துறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்ட்பு !
[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2895 ]
ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விபூசிகா.
பின்னர் மாலை 4 மணியளவில் அவரது வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் விபூசிகாவின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்த விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன்னர் விமல் வீரவங்சவின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது !
[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2555 ]
ராணுவத்தினர் பலமாக இருக்கும்வேளையில் புலப்படுகிறது விடுதலைப் புலிகளின் வலு !
[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 6290 ]
மோதல்கள் எவ்வாறு முடிவுக்கு வந்தன என்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள காயங்கள் எப்படி இன்னமும் ஆறாமல் உள்ளன என்பதையும் புறக்கணிக்க முடியாது. மிகச் சிறந்த வீதிகளூடாக பயணம் செய்தவேளை எறிகணை மற்றும் துப்பாக்கிச் சன்னச் சிதறல்களால் பாதிக்கப்பட்ட பல வீடுகளை என்னால் பார்க்க முடிந்தது. பல இராணுவ நினைவுத் தூபிகளைக் காண முடிந்தது. விடுதலைப்புலிகளின் வலுவையும் உணரமுடிந்தது. அப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் எவற்றையும் காணமுடியவில்லை. இராணுவத்தின் நலன்புரி கடைகளைக் காணமுடிந்தது. பலர் அவற்றால் தங்களது சிறு வியாபாரம் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர்.
மொத்தத்தில் இராணுவ அதிகார பரவலாக்கத்தின் மத்தியிலும் புலப்படுகிறது ,விடுதலைப்புலிகளின் வலு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2369.html
Geen opmerkingen:
Een reactie posten