தமிழர்களிடம் பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அதிகாரிகள் தான் கடத்துகிறார்கள். என்ற விடையத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே எழுதி இருந்தது. இதனூடாக அன் நாட்டை வளைத்து தன் கைக்குள் போடுவது , பணத்தை சம்பாதிப்பது , புலம்பெயர் தமிழர்களால் தோன்றும் எதிர்ப்பை சமாளிக்க அவுஸ்திரேலியாவை பாவிப்பது என்பது போன்ற திட்டங்கள் கோட்டபாயவால் தீட்டப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள் செல்ல செல்ல , அன் நாடு மிகவும் பொறுமையை இழந்தது. இதனால் அன் நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. உடனே இதனை பயன்படுத்தி , அகதிகள் வருவதை நாம் குறைக்கிறோம் ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் எங்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் என்று கோட்டபாய டீல் போட்டுள்ளார்.
இதேவேளை ஒரு புறத்தில் தமிழர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு , அனுப்பும் மறைமுக முகவராகவும் அவரது ஆட்களே செயல்பட்டுள்ளார்கள். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆலோசகர் ,முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி மேஜர் கப்பில ஹெந்தவித்தாரனவின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்படையின் லெப்டினன் கேர்ணல் கே.சி .வெலகெதர இவ்வாறு ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தும் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் விசாரணை இடையில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடபடுகிறது. இந்த லெப்டினன் கேர்ணல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2412.html
Geen opmerkingen:
Een reactie posten