தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

அமெரிக்காவின் அகதிகள், மற்றும் குடிவரவு துறை அதிகாரி சூசன் ஹெய்லி குழுவினர் யாழ். விஜயம்!



கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 07:25.19 AM GMT ]
எவன் காட் மற்றும் ரக்னா லங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போரில் மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை என்பதால், இந்த ஆயுதங்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்படுத்த கோத்தபாய ராஜபக்சவே அனுமதியை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது சம்பந்தமாக ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவிடம் இரு முறை விசாரணை நடத்தியிருந்தனர். ஆயுதங்கள் வழங்க அனுமதி வழங்கியமை குறித்து அவர் தகவல் தந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் காலி கடற்படை முகாமில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஆகிய தொடர்பில் நடத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளில் சர்வதேச சமுத்திர சட்டங்களின் கட்டளைச் சட்டங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டன.
நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டமை, அவற்றை வழங்குவதற்கான உரிமை, ஆயுத களஞ்சியத்தை வைத்திருந்தமை மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமை ஆகிய குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ளதுடன் விசாரணைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அகதிகள், மற்றும் குடிவரவு துறை அதிகாரி சூசன் ஹெய்லி குழுவினர் யாழ். விஜயம்!
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 11:53.09 AM GMT ]
அமெரிக்க நாட்டின் தெற்காசிய பிராந்தியத்தின் சனத்தொகை பெருக்கம், அகதிகள், மற்றும் குடிவரவு துறை அதிகாரி சூசன் ஹெய்லி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு, வலி,வடக்கு மக்கள் தங்கியிருக்கும் முகாமில் மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 
இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.வந்த மேற்படி குழுவினர் முதன்மையாக வலி,வடககு மீள்குடியேற்ற குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பின்னர் வலி,வடக்கு மக்கள் தங்கிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலை மற்றும் குறைகள், தேவைகள் தொடர்பில், பார்வையிட்டுள்ளதுடன், மக்களை சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6G.html

Geen opmerkingen:

Een reactie posten