தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் கால தாமதமாக காரணம் என்ன: ஜோன் அமரதுங்க

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:39.39 AM GMT ]
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
ஆரம்ப தின நிகழ்வில் உரையாற்றவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவுள்ளார்.
இலங்கை மீதான விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இதன்போது அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அறிக்கையும் மார்ச் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதில் உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் பற்றியும், நாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நடவடடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
மேற்படி வருடாந்த அறிக்கையில். இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பிலும் பதிவுகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் புதிய அரசு கொண்டுவரவுள்ள சட்டதிருத்தங்கள் தொடர்பில் ஆரப்படவுள்ளது.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையும் 28வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, குழுக்கள் அமைப்பு விடயமும் இடம்பெறவுள்ளது.
ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்களின் அறிக்கைகளும் பேரவையில் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
28வது தொடருக்கான நிகழ்ச்சி நிரழில் மார்ச் 25ம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அந்த விடயம் நீக்கப்பட்டுள்ளது.
28வது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை கோடிகாட்டி பேசுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன.
இலங்கை மீது தீர்மானம் நிறைவேறுவதற்கு இவ்விரு நாடுகளும் பிரதான பங்கை வகித்தன என்பதுடன், தற்போது அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியிலும் இவற்றின் பங்கு பெரிதும் இருப்பதாக பல்வேறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சார்பில் இந்தக் கூட்டத்தொடருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.
அத்துடன். உப கூட்டங்களில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyF.html

ஐந்து வயது பிள்ளையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:52.13 AM GMT ]
ஐந்து வயது பிள்ளையை கைவிட்டுச் சென்ற பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐந்து வயதான பெண் பிள்ளை ஒன்றை இவ்வாறு பெற்றோர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்படைய சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். பிள்ளையை கைவிட்டுச் சென்ற பெற்றோரை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதி
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:47.13 AM GMT ]
யாழ் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக நேற்று முதல் இணையத்தள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் டி.டப்ளியூ. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இணையத்தள வசதிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து கொண்டார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ரயில் திணைக்களத்தின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 ரயில் நிலையங்களில் வைபை இணைய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என சிசிர குமார தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது! உதய கம்மன்பில பொருமல்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 11:01.16 AM GMT ]
ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை இதற்கு முன்னரும் பல தடவைகள் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனாலும் இன்று அதனை தூக்கிப் பிடிக்கும் தரப்புகள் அன்று அதற்கு ஆதரவளிக்கவில்லை.
தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கை மட்டுமே. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெறுவதற்கு மட்டுமே தேசிய அரசாங்க கொள்கை உதவியாக இருக்கும். எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உதய கம்மன்பில பொருமியுள்ளார்.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் சந்தேகத்திற்குரியது: விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 11:34.02 AM GMT ]
சர்ச்சையை ஏற்படுத்திய திறமையான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூதீனின் மரணம் இயற்கையாக நிகழ்ந்த விபத்தினால் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸ் மா அதிபர் மாற்றியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கார் ஒன்றில் வசீம் தாஜூதீன் இறந்து கிடந்தார். வாகன விபத்து காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், இன்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய அறிக்கையில் காபன் மொனோக்சைட் றகர் வீரரின் உடலில் பெருமளவில் பரவிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரச இரசாயன பாகுப்பாய்வாளர் நீண்டகாலமாக தனது அறிக்கையை வழங்கவில்லை. கடந்த 12 ஆம் திகதி அந்த அறிக்கை வழங்கப்பட்டது. எனினும் நிலைமைகளின் அடிப்படையில் பரிசோதனை முடிவை வழங்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வசீம் தாஜூதீனின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் கால தாமதமாக காரணம் என்ன: ஜோன் அமரதுங்க
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 11:20.28 AM GMT ]
குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை கால தாமதமாவதற்கான காரணங்கள் என்ன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த கால அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்மோசடிகள் நிதி மோசடிகள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகளை விசாரிக்க ஏன் கால தாமதமாகின்றது.
பாரியளவிலான மோசடிகள் நிதி மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இன்று கொள்ளுப்பிட்டி கால்வில் பகுதியில் காரியாலயமொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ரத்துபஸ்வல சம்பவம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, வெலே சுதா போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvzD.html


Geen opmerkingen:

Een reactie posten