தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 mei 2017

பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த 12 இளைஞர்களை இந்திய பொலிஸார் தமிழ்நாட்டில் வைத்து கைது!

சென்னை - மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மெரினா கடற்கரையில் இடம்பெறும் எனவும் அதற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் மே 17 இயக்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பொதுமக்கள் வருகைதருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அனுமதியின்றி மெரினாவில் கூடினால் கைது செய்வோம் என இந்திய பொலிஸார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் மக்களின் வருகையை தடுப்பதற்கு அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போதே, மெரினா கடற்கரையில் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டை மற்றும் கறுப்பு நிற சட்டைகளை அணிந்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது வரை 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேடி, அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/india/01/146446?ref=view-latest

பிறந்தநாளில் கேக் வெட்ட மைத்திரியை அழைக்கும் தமிழ் தலைமைகள்! மக்களை கண்டுகொள்ளாதது ஏன்?

அனைத்து சிங்களவர்களையும் ஒன்றிணையுமாறு அவசர அறைகூவல்!

நான் புலியல்ல விட்டு விடுங்கள் : அடக்கப்படும் தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்!!

நரகமாய் மாறிய இரவுகள்: ஒரு பெண்ணின் உண்மை சம்பவம்!

குருநாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்! அமெரிக்கா கடும் கண்டனம்!

woensdag 17 mei 2017

கிளிநொச்சி வாள்வெட்டில் கணவர் பலி!! மனைவி ஆபத்தான நிலையில்

மூதூரில் முஸ்லிம்கள் வெளியேற்றம்! பதற்ற நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அதிரடிப்படை!

ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட இரு கேள்விகள்! நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

அமைச்சரின் அலுவலகத்தில் ஞானசார தேரர் அடாவடி! மௌனம் காத்த மனோ

நடப்பது வேறு என மிரட்டல் விடுத்துள்ள பிரபாகரனைக் கண்டு ஓடி ஒளிந்தவர்கள்!

பிரான்ஸ் செல்லும் நோக்கில் வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

பிரித்தானியாவில் இளம் யுவதிகளை துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோதரர்களுக்கு சிறை