தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

அமைச்சர்கள் எண்ணிக்கை உயருமாம்..! தேர்தலுக்கு ஆப்பாம்..?

மஹிந்தவே தலைவர்! அத்தநாயக்கவின் மகள்

நாமல் ராஜபக்ச உட்பட பதவி விலக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் தனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமில்லையென்றும் குறிப்பிடுகிறார். அண்மையில் பிரபலமடைந்த அவர் தற்போது அடிக்கடி ஊடகங்களுக்கு தகவல் வழங்கி வருவதோடு மஹிந்த ராஜபக்சவை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/98470.html

மகிந்தவின் அடுத்த விமானமும் அகப்பட்டது

முன்னதாக சீன நிர்வாகத்தின் கீழான மகா(உ) பிராந்தியத்தின் தேசிய விமான சேவையான Air Macau வினால் பயன்படுத்தப்பட்ட 12 வருட பழமையான குறித்த விமானம் கொழும்பு – இந்தியா, பஹ்ரைன், சார்ஜா, பாகிஸ்தான் ஆகிய விமானப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் என மிஹின் லங்கா தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விமானம் A319-100 ரகத்தைச் சேர்ந்ததாகும்.
நஷ்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா, சிறிலங்கன் விமான சேவையோடு இணைக்கப்படும் எனவும் தேவைக்கதிகமான துணை நிறுவனங்கள் மூடப்படும் எனவும் பதவியேற்ற கையோடு முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் எண்ணிக்கை உயருமாம்..! தேர்தலுக்கு ஆப்பாம்..?

தேசிய அரசாங்கமொன்றுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு சுதந்திரக்கட்சி ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன் படி அமைச்சர்களின்  எண்ணிக்கை 100 ஆக உயர்த்தவும் அதில் 45 அமைச்சர்களும் 55 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படும் அதேவேளை வரும் ஏபரல் மாதம் இடம்பெற இருந்த பொது தேர்தலை இரண்டு வருடத்துக்கு ஒத்திவைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால ,டிலான் பெரேரா,ரேஜினோ குரே உள்ளிட்ட பலர் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள நிலையில் மஹிந்த ஆதரவு சுதந்திரகட்சி உறுப்பினர்கள் பலர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சுப் பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில்  பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தை தேர்தல் ஒன்றை நடாத்தாமல் அமைக்க எதிர்ப்பு வெளியிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/98482.html

Geen opmerkingen:

Een reactie posten