[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:16.00 AM GMT ]
இதனை தவிர 19வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தகவல் அறியும் சட்டத்தை மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒழுக்க நெறி கோவை தொடர்பான விடயம் நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuyB.html
லண்டனில் ஆர்ப்பாட்டத்தின் போதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்!
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:16.42 AM GMT ]
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை லண்டனில் போராட்டத்தின் போதும் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கப் போவதில்லை என்ற போதும் அதைக்கூட சமர்ப்பிக்காமல் காலந் தாழ்த்துவதன் பின்புலத்தை நன்கு அறிந்தவர்களாகவும்,தமிழ் மக்களாகிய நாமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் எமது மண்ணை மீட்கவும் நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் உறவுகள் உணர்வோடு கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கந்தையா ராஜமனோகரன் அவர்களும் தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சஞ்சய் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களும் உரையாற்றினர்.
அத்துடன் நீதிக்கான போராட்டத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவும் அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் இன்று நடைபெற்ற நீதிக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு எரிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
இரண்டாம் இணைப்பு
பிரித்தானியாவில் நேற்று மாலை 4.00 மணியிலிருந்து 6.00மணிவரை 24,Grosvenor Square, WIA 2LQ என்னும் இடத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் நீதிக்கான போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு தமிழ் இனத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தக் கோரியும் இலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு முன்னரே மக்கள் பெருமளவில் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஒன்றுகூடினர். கைகளில் பதாகைகளையும் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பிடித்தவாறே கொட்டொலிகளை எழுப்பினர். "We reject Srilanka 's LLRC , Time and space for Srilanka kills tamil nation , Not just war crimes , it 's planned genocide " போன்ற பல கொட்டொலிகளை அங்கு திரண்டிருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுப்பினர்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கும் குறிப்பாகத் தமிழீழ மண்ணிலும் இன்றைய நாளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா அரச பயங்கரவாத அடக்குமுறை ஆட்சியில், திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வதைபடும் தமிழீழ மக்கள் தன்னெழுச்சியாகத் துணிவோடு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஒரே காலப்பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையால் தமிழ் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் தமிழ்மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் முன்னைய மகிந்த ஆட்சியில் எப்படி தொடர்ந்தனவோ அப்படியே மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் தொடரும் என்பதையும்,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்ற போலியான தோற்றப்பாட்டைக் கொடுத்து, அதற்கமைய சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்க ஐ நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதையும் தமிழ் மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்பதை இன்றைய போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuyC.html
Geen opmerkingen:
Een reactie posten