ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர்
அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு புகலிடம் கோரி வந்த சுஜன் செல்வன்
!!
உண்மையில் எதை வைத்து இவர்கள் தஞ்சம் கொடுக்கிறார்களோ!!
உண்மையில் எதை வைத்து இவர்கள் தஞ்சம் கொடுக்கிறார்களோ!!
ஒரு தமிழனுக்கு ஆபத்து இருக்கு என்கிறார்கள்,தஞ்சமும் கிடைத்து அங்கு
அரசியலும் செய்கிறான் ,அவனது பக்கத்து வீட்டில் இருந்து வரும் மற்றவனை
மறுக்கின்றார்கள்!
சிலருக்கு ஒரு நாடு அகதி என்கின்றது,இன்னொரு நாடு போலி என்கின்றது!
அகதியாகக்கூட அதிஸ்ரம் வேணுமாம்!அதிஸ்ரம் இருப்பவன் சொந்த நாட்டிலேயே எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இருப்பவன் அல்லவா!மூடர்கள் பணக்காரராக இருப்பதால் இஸ்ரத்துக்கு ஆடுறாங்க,அகதிகளுக்கும் தேர்வு நடாத்துறாங்க!!
உலகம் உருண்டை,காலம் மாறும்!காத்திருப்போம்!௮௦-90இல் வந்தும் அகதி அந்தஸ்து ஐரோப்பிய நாடுகளால் மறுக்கப்பட்ட சிலரையும் நேற்று வந்து அகதி அங்கீகாரம் பெற்ற பலரையும் கண்டு காரணம் கேட்டு வேதனையில் சொல்கிறேன்!!
பணம் இருக்கவேண்டிய இடத்தில் இருப்பதே அதற்கு பெருமையும் பெறுமதியும்!!!கெட்டவனிடம் உள்ள பதவி,பணம் நாட்டையே அழிக்கும்!
இஸ்லாமியருக்கு அவர்கள் நாட்டில் யுத்தத்தை உண்டாக்கி அகதிகளாக தங்கள் நாட்டில் ஏற்கும் ஐரோப்பா,அமரிக்கா இன்று கலங்கவில்லையா?!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார்.
மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார்.
தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்தவர்களில் பசுமைக் கட்சியின் அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள் என்று குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு புகலிடம் கோரி வந்த சுஜன் செல்வன் என அழைக்கப்படும் இவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் சார்பில் பசுமை கட்சியில் போட்டியிடுகின்றேன்.
வருகின்ற 3ம் மாதம் நடைபெறும் இந்த தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
கிறீன் கட்சியானது இலங்கை தமிழர்கள் விடயம் மற்றும் அகதிகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுக்கின்ற காரணத்தினால் தான் கிறீன் கட்சியை ஆதரித்து தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
தற்போது அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் சற்று அதிகரித்துள்ள காரணத்தினால் வருகின்ற காலங்களில் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கின்ற சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.
அது போன்று இளம் சமுதாயத்தினரும் வருகின்ற காலங்களில் அரசியலில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அது போன்று அகதிகள் விடயத்திலும் தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பாகவும் ஈழ அகதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தனது குரல் ஒலிக்கும் என்றும் தெரிவித்தார்.
எமது இலக்கை அடைய வேண்டும் என்றால் மற்றைய நாடுகளை போன்று அவுஸ்திரேலியாவிலும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களை செயற்படுத்த தனக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.
அவுஸ்திரேலியாவில் இதற்கு முதல் ஒரு பெண் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர் இரண்டாவது தமிழ் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt5G.html
Geen opmerkingen:
Een reactie posten