[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 05:55.03 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் யாழ் அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட மாகாண முதல் அமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள் பங்கேற்கவிருக்கின்றார்கள்.
ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர்கள் ஒன்பது பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றார்கள். இங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv3G.html
இறுதிக்கட்டப் போரில் இலங்கை படையினர் போர்க்குற்றம் புரியவில்லை: கருணா
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 06:07.31 AM GMT ]
அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கம்போடியாவின் பொல்போட் மற்றும் ஈராக், குர்திஷ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை என்பனவும் போர்க்குற்றங்கள்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினர் போர்க்குற்றங்களை செய்யவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் துப்பாக்கி முனையில் ஆயிரக்கணக்கான மக்களை பணய கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை விடுதலை போராட்ட இயக்கமாக கருத முடியாது.
இலங்கை படையினர் பணயமாக வைத்திருந்த மக்களை மீட்டதுடன் அங்கு போர்க்குற்றங்கள் நடக்கவில்லை எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி கிழக்கில் சரணடைந்த 600 பொலிஸார் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்த கால கட்டத்தில் கருணா விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தார். 2004 ஆம் ஆண்டு கருணா அந்த அமைப்பில் இருந்து விலகினார்.
எவ்வாறாயினும் 1990 ஆம் ஆண்டில் கிழக்கில் பொலிஸார் கொலை செய்யப்பட்டமைக்கு தான் பொறுப்பல்ல என கருணா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv3H.html
Geen opmerkingen:
Een reactie posten