தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

லண்டன் வரும் மைத்திரி யாரை அழைத்து வந்தாலும் கைதுசெய்யப்படலாம் !

2 லட்சம் சிங்கள ராணுவம் ஐ.நாவின் இணையும்: படையை குறைக்கும் நோக்கம் இல்லை !

[ Feb 27, 2015 03:12:35 PM | வாசித்தோர் : 5520 ]

இலங்கையில் தற்போது முப்படைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது , என்று கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியவேளை கோட்டபாய ராஜபக்ஷ படுவேகமாக சிங்கள இளைஞர்களை படையில் இணைத்து பாரிய படையணிகளை உருவாக்கி இருந்தார். இவர்களில் 2 லட்சம் பேரை ஐ.நாவின் அமைதி காக்கும் படையணியில் சேர்க்க உள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தற்போது தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது யுத்தம் எதுவும் நடைபெறவில்லை. இன் நிலையில் இதுபோன்று 5 லட்சம் படைகள் தேவையில்லை. எனவே படையை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் படையைக் குறைக்காது மிகவும் புத்தி சாதூரியமாக , இலங்கை அரசு ஒரு கணிசமான அளவு ராணுவத்தை ஐ.நாவுக்கு கொடுக்கிறது. இதில் வேறு விடையம் ஒன்றும் உள்ளது. இப்படைகளுக்கான செலவை ஐ.நாவே ஏற்றுக்கொள்ளும். எனவே காசும் மிச்சம் , அத்தோடு அதே அளவு படைகள் இலங்கையிடம் இருந்துகொண்டே இருக்கும். தேவை ஏற்படும் நேரம் அதனை அவர்கள் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். ஆகமொத்தத்தில் படையைக் குறைக்கும் எண்ணமோ இல்லை, வட கிழக்கில் இருந்து படையினரை அகற்றும் எண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.

கோட்டா விரட்டிய பிரஸாந்த நேற்று முன் தினம் இலங்கை வந்துவிட்டார் !

[ Feb 27, 2015 03:19:48 PM | வாசித்தோர் : 5745 ]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மரண அச்சுறுத்தல் விடுத்து இலங்கையை விட்டு விரட்டிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரஸாந்த ஜயக்கொடி அவுஸ்திரேலியாவின் சிட்டி நகரில் இருந்து 24ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பிரஸாந்த ஜயக்கொடி அங்கு சிட்னியில் வாழ்ந்து வந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு உள்ளதால் நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.
இலங்கை வந்ததும் பிரஸாந்த ஜயக்கொடி கொழும்பு கலதாரி ஹோட்டலில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தான் நாட்டை விட்;டு சென்றமைக்கான காரணத்தை விளங்கப்படுத்தவுள்ளதுடன் மீண்டும் பொலிஸ் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. தற்போது மந்தகதியில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் விசாரணைகள் சிலவற்றை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பிரஸாந்த ஜயக்கொடிக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லண்டன் வரும் மைத்திரி யாரை அழைத்து வந்தாலும் கைதுசெய்யப்படலாம் !

[ Feb 27, 2015 03:00:23 PM | வாசித்தோர் : 12140 ]
வரும் 8ம் திகதி மைத்திரிபால சிறிசேன லண்டன் வருகிறார் என்பது தற்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. காமன் வெலத் நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் , அதற்கு முன்னதான ஒத்திகை சந்திப்பு இது என்று கூறப்படுகிறது. இதேவேளை அவர் பிரித்தானிய மகாராணியாரைச் சந்தித்து அவரோடு மாலை உணவு உபசாரத்திலும் கலந்துகொள்ள உள்ளார். இது ஒரு புறம் இருக்க , மைத்திரிபால சிறிசேன தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக ராணுவத்தினரை அழைத்து வந்தால் அவர்களை பிரித்தானியாவில் கைதுசெய்ய முடியுமா என்று சில தமிழ் கல்விமான்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
மகிந்த ஆட்சியில் இருந்தவேளை மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்ட சில ராணுவ அதிகாரிகள் இன்னமும் மைத்திரியோடு தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் யாரவது மைத்திரியுடன் லண்டன் வந்தால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனூடாக அவர்களை லண்டனில் கைதுசெய்ய சில தமிழர் தரப்பு முனைப்பு காட்டி வருகிறது. இதேவேளை லண்டன் வரும் மைத்திரிக்கு எதிராக போராடவேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/2413.html


Geen opmerkingen:

Een reactie posten