இன்று வடக்கு- கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தும் மாகாணங்களாக இலங்கையில் இருக்கின்றது.
ஏனைய மாகாண சபைகளின் நடவடிக்கைகளில் சிங்கள மக்களின் கவனத்தை ஈர்ப்பது போல் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் கவனத்தை ஈர்க்கும் மாகாணங்களாகும்.
வடக்கு – கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகளின் என்ன பேசப்படுகின்றது எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படுகின்றது என்பதையே ஏனைய பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் கவனிப்பது வழமை,
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை கண்காணிக்கும் மக்களுடன் ஏனைய அரசியல்வாதிகளும் கவனம் சற்று அதிகமாகவே உள்ளது.
அதேபோல் கிழக்கு மாகாணத்தின் செயல்பாடுகளில் முழு இலங்கையில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மிக ஆர்வத்துடன் தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையின் காரணமாகவே நமது தமிழ் மக்களின் எண்ணங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் தனி பெரும்பான்மை ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றிருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டும் ஒன்றிணைந்த காரணத்தினால் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தை ஐ.ம.சு.மு பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது..
அதற்கு மு.கா முழு ஆதரவையும் கொடுத்து மாகாண சபையின் அமைச்சுக்களையும் பெற்றுக்கொண்டது யாவரும் அறிந்த விடயமாக இருக்கின்றபோதும் இதை குறிப்பிட்டு எனது கருத்தை தெரிவிப்பது சிறப்பாகும் என்ற காரணத்தால் கீழ் கண்ட சந்தேகம்,கருத்துக்களை சமர்ப்பணம் செய்கின்றேன்.
ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது முஸ்லிம் காங்கரஸிற்கும் ஐ.ம.சு முன்னணியுமே அதில் கூட்டமைப்புக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. அதன் அடிப்படையியே கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஐ.ம.சு.மு யும் மு.கா வும் பகிர்ந்து 2 1/2 வருடம் ஆட்சி நடத்தி முடித்து விட்டது.
இந்த ஆட்சி அமைக்கும் ஒப்பந்தத்தை செய்த கட்சிகள் அவர்களின் கொள்கை செயற்பாட்டின்படியே ஐந்து வருட காலத்திற்கு ஆட்சி செய்வார்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஏன் என்றால் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை மதிப்பதாகவும் அந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலேயே முடிந்த இரண்டரை வருடத்தை ஐ.ம.சு.மு முதல் அமைச்சராக செயல்பட்டதாகவும்,அடுத்த இரண்டரை வருடத்தை மு.கா ஏற்றுக்கொள்ளவிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
அது இருகட்சிகளுக்கும் உள்ள பொறுப்பு கடமை அதில் கூட்டமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
ஐ.ம.சு.மு ,மு.கா ஒப்பந்தத்தில் எவ்வகையான நிபந்தனைகளை இந்த இருசாரரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிந்திருக்க நியாமில்லை.
ஆகவே கடந்த இரண்டரை வருட செயல்பாட்டில் தமிழ் மக்களுக்கு இந்த இரு கட்சிகளும் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தியது என்பதை நாம் சற்று பார்க்க வேண்டும்
எந்தவித பாகுபாடுகள் இன்றி மாகாண சபை த.தே.கூ உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர்கள் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்த உதவியதா?என்பது மிக முக்கியமான விடயம்.
அதே வேளை ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அவரின் செயல்பாட்டை நடைமுறைபடுத்த நிதி ஒதுக்குவது வழமை அந்த நிதியுடன் மாகாண சபை தனது கடமைகளை அல்லது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதா?என்பதை கவனிக்க வேண்டியதொன்றாகும்.
ஏன் என்றால் கடந்த இரண்டரை வருடத்தில் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் கூறும் கருத்தின் படி அவர் விவசாய அமைச்சராக செயல்பட்ட காலத்தில் பாகுபாடற்ற நிலையில் சகல மக்களுக்கும், அந்த மாகாண அபிவிருத்திக்கும், வேலைவாய்ப்பு உட்பட சகல நடவடிக்கைகளிலும் சகல மக்களுக்கும் சேவை செய்திருப்பவராக இருந்தால் அதை த.தே.கூ மாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் ஐ.ம.சுமு மற்றும் மு.கா கூட்ட ஒப்பந்தத்தில் சகலரும் சமம் என்ற நிலையாக கருதலாம்.
ஆனால் அவ்வாறு இப்போதைய முதலமைச்சர் செய்யாது வரும் இரண்டரை வருடத்தில் பிரிவினை பாராது செயல்படுவேன் என்று கூறினார். அவர் ஐ.ம.சு.மு ஒப்பந்தத்தை மீறும் செயலாகலாம்.
ஐ.ம.சு.மு,வேறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அதிகப்படியான செல்வாக்கை ஐ.ம.சு.மு செலுத்தினாலும் அங்கு மு.கா ஒன்றாக இன்று வரை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது இனியும் இருக்கப்போகின்றது.
அதன் உயர்தர தலைமைகள் ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு க்கு எதிராக போட்டியிட்ட சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரை ஆதரித்த போதும் இன்றும் ஐ.ம.சு முன்னனியின் ஒப்பந்தத்தை மதிக்கும் கட்சியாகவே மு.கா இருக்கின்றது என்பது உண்மை இனிமேலும் இருக்கப் போவதும் உறுதி.
ஆகவே இந்த கூட்டுக்கு எதிராகவே கூட்டமைப்பு உயர் தலைமைகள் முதல் மாகாண சபை அங்கத்தவர்கள் வரை கடந்த காலங்களில் செயல்பட்டார்கள். இந்த நிலையில் மாகாண சபையில் அமைச்சு பொறுப்பை கூட்டமைப்பு பெற்றுக்கொண்டால் கூட்டமைப்பு உண்மையாக மு.காவுடன் மாத்திரம் மாகாணசபையில் செயற்பட முடியாது, சுதந்திர கட்சியுடனும் இணைந்து செயல்பட்டே ஆக வேண்டும்.
அவ்வாறு நாம் பார்க்கும் போது மாகாண சபையில் உறுப்பினராக இருக்கும் பிள்ளையான் அவர்களுடனும் ஒன்றாக செயல்படவேண்டும், ஐ.ம.சு.மு முக்கிய பிரமுகராக இருக்கும் கருணாவுடனும் ஒன்றிணையவேண்டும்.
அந்த வகையில் கருணா, பிள்ளையான் ஆகியவர்கள் கடந்த காலங்களில் கூறிய கருத்துக்களை நீங்கள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கடந்த காலங்களில் ஐ.ம.சு.மு யினரால் மத்திய அரசால் செய்யப்பட்ட செயற்பாடுகளை அதற்கு ஆதரவு கொடுத்த மு.கா போல் நீங்களும் அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மு.கா கூட்டு என்று நீங்கள் கூறமுடியாது ஐ.ம.சு.மு மற்றும் முகா தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு என்று தான் கூறவேண்டும்.
அப்படி நீங்கள் மாகாணத்தில் கூட்டும் மத்தியில் கோரிக்கையும் என்ற இரட்டை கொள்ளையையே பின்பற்ற வேண்டிய நிலை தோன்றும்.
தமிழ் மக்களுக்கு கடந்த இரண்டரை வருடத்தில் கிழக்கு மாகாண சபை நேர்மையாக, உண்மையாக இதய சுத்தியுடன் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைகளை முழு மனதுடன் செய்து முடித்திருந்தால் நீங்கள் தாரளமாக அமைச்சு பொறுப்புகளுடன் அவர்கள் மாத்திரம் அல்லாது ஐ.ம.சு.மு க்கும் ஆதரவும் வழங்கப்படலாம் இதுதான் நியதி என எண்ணலாம்.
அதேபோல் வரும் இரண்டரை வருடகாலம் நீங்கள் அமைச்சர்களாகி தமிழ் மக்களுக்கு உரிமையையா அல்லது சலுகைகளையா பெற்று கொடுக்கப் போகின்றீர்கள் என்பது கேள்விக்குறியே?
முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஓர் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கடந்தவாரம் கூறிய கருத்தின்படி மு.கா அதன் கொள்கையின் அடிப்படையிலேயே அதன் செயல்பாட்டை முன்னிறுத்தி செல்கின்றது,
த.தே.கூ பின் நிலைபாடு எதுவானாலும் அது அந்த கட்சியை பொறுத்ததும் என்றும் எங்கள் வழியில் அவர்கள் தலையிடுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறினார் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மு.கா முக்கியஸ்தர்.
ஆகவே நீங்கள் 11 பேரும் மாகாண அமைச்சர்களாக வருவதை நாம் முழு மனதுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் 3 பதவிகள் மாத்திரம் கிடைக்கப் போகின்றது. ஏனைய மிகுதியாக உள்ள எட்டு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இதில் ஏதோ எப்படியோ மனச் சஞ்சலம் ஏற்படலாம் ஏன் என்றால் அவர்களும், மனிதர்களே அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு.
இதை நான் குறிப்பிட முக்கிய காரணம் விடுதலைப் புலிகள் கட்டமைப்பு மிக பலமாக இருந்த வேளை கிழக்கு மாகாணத்திலேயே அதன் கட்டமைப்பு உடைய காரணமானது என்பதும் அதை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதைய ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் என்பது சரித்திரம். அதன் பின் புலிகள் இயக்கத்திற்கு நடந்தது என்ன சற்று சிந்தியுங்கள்
இன்று த.தே.கூ தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை செய்ய முடியாது இருந்தாலும் மக்களின் கட்சியாக இருக்கின்றது. இதையும் இந்த இரண்டரரை வருட அமைச்சு பதவியின் மூலம் அல்லது சதிகளின் மூலம் பிரிக்கப்படலாம், அதை கடந்த காலத்தில் மகிந்த அரசால் முயற்சி செய்தும் முடியாது போனதை இப்பொழுது செய்ய நீங்களே ( தமிழ் தேசிய கூட்டமைப்பு ) காரணமாகி விடுவீர்களோ என்ற பயமே எமக்குள்ளது.
அதையும் தாண்டி நீங்கள் செயல்படலாம் ஆனால் மக்கள் முடிவு சில வேளை உங்களுக்கு எதிராகிவிட்டால் மாகாண சபை உறுப்பினர்கள் அதிகரிப்பிற்கு பங்கம் ஏற்பட்டால் என்ன செய்யப் போகின்றீர்கள்?
இன்று மனித உரிமை மீறல் காணி சுவீகரிப்பு, மீள் குடியேற்றம் சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் புலம்பெயர் உறவுகளின் முயற்சி காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீர் இவை அனைத்தும் உங்கள் முன் உள்ள சவால்கள்.
நீங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல நீங்கள் விடுதலை தளபதிகள் நீங்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் சவால்கள் பல இந்த நிலையில் உங்களின் உங்கள் 11 பேரில் 3வரை இழக்கப்போவது கிழக்கு மாகாண சபையில் வருந்தக்கூடியதே.
இந்த மூவர் 2 அமைச்சர் ஒரு உப தலைவர் என்றால் ஏனையவர்கள் முழு திருப்தியுடன் இருப்பார்களா?
மு.கா வேண்டுமானால் உலகிற்கு நாட்டிற்கும் சாதகமாக முன் உதாரணமாக காட்டலாம். அதனால் அவர்களைப் பற்றிய புகழ் பரவலாம். ஆனால் தமிழ் மக்களின் நிலை அதனால் ஏற்படும் பலன்? அதையே நாம் சிந்திக்கவேண்டும்.
இது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கூட்டமைப்பும் சிந்திக்க வேண்டியது. தீர்மானிப்பது மக்கள். எனினும் நாம் கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழ் மக்கள் பிரிந்துவிட காரணமாக இந்த பதவிகளே காரணமாக இருந்தது.
இது பெரும்பான்மை கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை அதற்கான உதாரணமாக கீழ் கண்ட நடந்த சம்பவங்களை நாம் பின்நோக்கி பார்க்க வேண்டும். இந்தவகையில்
1.விடுதலைப் புலிகள் பிளவு ஓர் முஸ்லிம் (ஐ.தே.க ) பாராளுமன்ற உறுப்பினர் மூலம் நடந்தது.கருணா, பிள்ளையான் பதவிகளுக்காக மயங்கினார்கள் முடிவு?
2.மனோ கணேசனின் ஐ.ம.ஜ மு தனது சொந்த சகோதரன் பிரபா கணேசன் பதவிக்காக அரசுடன் சேர்ந்து பிளவு.
3.இ.தொ.கா பதவிகள் வழங்குவதில் பாகுபாட்டால் பிளவு.
4.ஐ.தே.க உறுப்பினர்கள் (பா.உ) பதவி மோகத்தால் பிளவு முன்னைய
5. மக்கள் விடுதலை முன்னணி பிளவு பதவி மோகம் கொண்ட விமல் வீரவன்சவால்
2.மனோ கணேசனின் ஐ.ம.ஜ மு தனது சொந்த சகோதரன் பிரபா கணேசன் பதவிக்காக அரசுடன் சேர்ந்து பிளவு.
3.இ.தொ.கா பதவிகள் வழங்குவதில் பாகுபாட்டால் பிளவு.
4.ஐ.தே.க உறுப்பினர்கள் (பா.உ) பதவி மோகத்தால் பிளவு முன்னைய
5. மக்கள் விடுதலை முன்னணி பிளவு பதவி மோகம் கொண்ட விமல் வீரவன்சவால்
த.தே.கூ பிளவுகளுக்கு முழு முயற்சியும் வேலைத்திட்டங்களும் இருந்தபோதும் (மறைமுகமான உதவிகளை பெற்றிருக்கலாம்) ஆனால் பொதுவாக பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் ஆசைப்பாடாத காரணத்தால் இன்றுவரை பிளவுப்படாமல் இருக்கின்றது.
அதே கிழக்கு மாகாணத்தில் அதே பதவிகளுக்காக ஆசைப்பட்டால் நிச்சயம் பிளவுகளை தான் இக்கட்சி எதிர் நோக்கலாம் என்பதே யதார்த்தம்.
நிச்சயமாக வரும் இரண்டரை வருட காலத்தில் ஏற்கனவே இவ்வருட வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது அதில் ஒதுக்கப்பட்ட நிதி அல்லது அபிவிருத்தி திட்டங்கள் ஐ.ம.சு.மு மற்றும் மு.காவினால் ஏற்படுத்தப்பட்டது.
ஆகவே நியதியின் படி அவர்கள் அதைத்தான் செய்ய வேண்டும் செய்வார்கள் அதற்கு த.தே.கூ எதிர்ப்பு காட்டமுடியாது.ஏன் என்றால் வரவு – செலவு திட்டத்திற்கு நீங்கள் ஆதரவு அளித்து வாக்களித்துள்ளீர்கள்.
அடுத்த ஆண்டு 2016 உங்களின் கோரிக்கைகளையும் முதல் அமைச்சர் மனது வைத்து ஏற்றுக்கொண்டால் நிதி ஒதுக்கீடு செய்யலாம் ஆனால் அதை நடைமுறைப்படுத்த முற்படும் வேளை மாகாண சபை தேர்தல் நடைபெறலாம் அல்லது அதற்காக சந்தரப்பம் ஏற்படலாம்.
ஆகவே வரும் இரண்டரை வருட காலத்தில் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்ன செய்யவார்கள் என்பது எமக்குள்ள கேள்வியாகும்.
எனினும் நீங்கள் மாகாண சபைக்கு ஆதரவு கொடுங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் தீர்மானங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள் விகிதாசார முறையில் வேலைவாய்ப்பை இந்த மாகாண சபை வழங்குவதற்கு நீங்கள் ஆதரவை தொடருங்கள்.
உங்கள் கோரிக்கைகளை முதல் அமைச்சர் நிறைவேற்ற நீங்கள் அமைச்சு பதவியில் அமர்ந்து உங்களால் பிரச்சினையை தீர்க்கமுடியாது என்பதே எமது சந்தேகம்
அதற்கு காரணமாக வட மாகாண சபையின் செயல்பாட்டிற்கு கடந்த காலங்களில் இருந்த தடைகள் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதைபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கப்போகின்றது?.
மு.கா மாத்திரம் உங்களுக்கு உதவ முடியாது. ஐ.ம.சு.மு உங்களின் கோரி்ககைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் இல்லையேல் அங்குல அபிவிருத்திக்கூட நடக்காது.
த.தே.கூட்டமைப்பு உலகம் முழுதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட இயக்கம் இதை பாதுகாக்க பதவி என்ற அம்பை எய்து பிளவுகளை உண்டாக்க சிலர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகலாம்?என்பது கடந்த கால கசப்பான சம்பவங்கள் எடுத்துக்கூறியுள்ளது.
அதன் வெளிபாட்டை மீள் ஆய்வு செய்து முடிவை எடுக்காமல் போனால் இந்த சர்வதேசம் அங்கீகரித்திற்கும் பங்கம் ஏற்படலாம்.
எனவே கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடம் சற்று சிந்தித்து செயல்பட தலைமைகள் உதவவேண்டும், ஆலோசனை வழங்கவேண்டும்
மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்கவேண்டும் இதுவே எமது எதிர்பார்ப்பாகும்.
மக்களின் நலம் சார்ந்த முடிவே நமது இனத்தின் ஒற்றுமைக்கு பலம்.
மகா.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5J.html
Geen opmerkingen:
Een reactie posten